அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மஜகநிர்வாகிகள் பங்கேற்பு!! கோவை:ஏப்.24., கோவையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். அதை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைலிருந்து இன்று 38நபர்கள் டிஸ்சார்ஜ் செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் S.P.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, இஎஸ்ஐ மருத்துவ மனை முதல்வர் டாக்டர், நிர்மலா, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர், காளிதாஸ், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், ஆகியோர் பழக்கூடைகள் வழங்கி கரவொலிகள் எழுப்பி அவர்களை வழியனுப்பி வைத்தனர். இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன்,சுவனம் அபு. மற்றும் தமுமுக, மமக, ஜாக், முஸ்லிம்லீக், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 24.04.2020
Tag: M.தமிமுன் அன்சாரி
கொரோனா பேரிடர் ஒருங்கிணைப்பு குழுக்களை உடனே அமைக்கவேண்டும்!
மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAவேண்டுகோள்! கொரணா நிவாரண பணிகளில் பலதரப்பட்ட சமூக சேவகர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரணாவின் தாக்கம் என்பது ஜூன் மாதம் வரை நீடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு என்பது இன்றோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது. இது எப்போது முடியும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்நிலையில் அரசு மட்டுமே இப்பிரச்சனையை முழுமையாக சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது அரசு ஊழியர்களின் மகத்தான சேவைகள் போற்றுதலுக்குரியது. அது போல் தன்னார்வலர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு ஆங்காங்கே சேவை செய்கிறார்கள். எனினும் அது ஒழுங்குப் படுத்தப்படாத காரணத்தால் அந்த சேவைகள் கிடைக்கப்பெறாத இடங்களும் அதிகம் உண்டு. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அமைப்புகள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கொண்ட ஒரு குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட வேண்டும். இந்த பேரிடர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திட்டமிடலை உருவாக்கி வெற்றிகரமாக பல்வேறு பணிகளை செய்ய முடியும். இதைப் போலவே மாநில அளவில் சமூக அமைப்புகள், கார்ப்பரேட் கம்பெனி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு
தூய்மை பணியாளர்களுக்கு மஜக சார்பில் குடும்ப நலஉதவிகள்
ஏப்.21, நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளைகளின் சார்பாக ஊரங்கு காரணமாக வாழ்வாதாரங்கள் முடங்கி கிடக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கிருமிநாசி தெளிப்பு மற்றும் சுகாதாரப்பணிகளில் சிறப்புர ஈடுப்பட்டு வரும் ஏனங்குடி ஆதலையூர் புத்தகரம் ஊராட்சியை சார்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மஜக சார்பில் வழங்கப்பட்டது. இதில் மஜக திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் ஒன்றிய துணை நிர்வாகிகளும், ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய மஜகவினர் : மருத்துவமனை முதல்வர் நன்றி!!
கோவை:ஏப்.21., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவர்களுக்கு தேவையான சாணிடைசர்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினி பவடர்கள், உள்ளிட்ட பொருட்களை மருத்துவமனை முதல்வர் திருமதி, நிர்மலா, அவர்களிடம் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். அதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அவர்கள் இங்கு வருபவர்கள் எல்லாம் நோயாளிக்கு தேவையான பொருட்களை மட்டுமே வழங்குகிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும்தான் எங்களை போன்ற மருத்துவர்களுக்கு அவசியமான பொருட்களை வழங்கியிருக்கிறீர்கள் இது எங்களுக்கு மிகவும் அவசியமானது என கூறி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் சுவனம் அபு, பைசல், பரக்கத்அலி, மற்றும் சிங்கை கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 21.04.2020
ஆனந்த் டெல்டும்ப்டேவை விடுதலை செய்யவேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இந்தியாவின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர், எழுத்தாளர், அறிவுஜீவி என கொண்டாடப்படும் ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களை கைது செய்திருப்பதை மனித நேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வு (NIA) அமைப்பால் கடந்த 14.04.2020 அன்று கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார். https://m.facebook.com/story.php?story_fbid=2409167445849683&id=700424783390633 அவருக்கு ஆதரவாக எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்ட நாடறிந்த அறிவுஜீவிகளும், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்களும்,மனித உரிமை மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களும் களமிறங்கி போர் குரல் எழுப்பி வருகின்றனர். வெறுப்பு அரசியலில் வழியே பிரிவினைவாத நடவடிக்கைகளை வளர்த்து வரும் தீய சக்திகள் பாதுகாக்கப்படுவதும், தேசத்தின் முகவரிகளாக இருக்கும் அறிவுஜீவிகள் ஒடுக்கப்படுவதும் வேதனையளிக்கிறது. தங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுபவர்களை அடக்கு முறை சட்டங்கள் வழியே ஒடுக்க நினைப்பது ஃபாஸிசத்தின் கோர முகமாகும். கொரணா பரபரப்பில் நாடே மூழ்கியிருக்கும் சமயம் பார்த்து அவரை கைது செய்திருப்பது ஒரு வகை அரச தந்திரப் போக்காகும். அறிவுஜீவிகளை ஒழிக்க நினைக்கும் சர்வாதிகார அரசுகள் வெற்றிப் பெற்றதில்லை என்பதை வரலாற்றில் படிக்கிறோம். அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று, அறிவுத் தளத்தில் அவருக்கு எதிராக செயலாற்றுவதே சிறந்த ஆளுமைப்