சென்னை.ஏப்ரல்.16., இந்தியா முழுவதும் கடந்த 23 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஏழை எளியோருக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக வில்லிவாக்கம், சூளைமேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு அத்தியாவசிய பொருட்களை பல கட்டங்களாக விநியோகித்து வருகின்றனர். மேலும் கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருபவர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டை உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தனர். இதுவரை 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக விநியோகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னைமேற்கு 16-04-2020
Tag: கொரோனா வைரஸ்
லால்பேட்டையில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் விநியோகம்!
ஏப்.15, இன்று கடலூர் தெற்கு, லால்பேட்டை பேரூர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்த மூலிகை மருந்தான 'கபசுர குடிநீர்' மஜகவினால் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. மஜக அவசர ஊர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டு மெயின்ரோடு, புது பஜார், ஸ்கூல் தெரு, கொத்தவால் தெரு, பனேஷா பள்ளி, இக்பால் வீதி, வடக்கு தெரு, மேலத்தெரு போன்ற வீதிகளிலும், தொடர்ந்து மாலை நேரத்தில் கொல்லமலையிலும் பொதுமக்கள் இல்லங்களைத் தேடி சென்று வழங்கியதால் ஆர்வமுடன் வாங்கிப் பருகினர். இதில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹுசைன், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, நகர செயலாளர் ஜாபர் சாதிக், நகர பொருளாளர் யூனுஸ், நகர துணை செயலாளர் பிரபு, நகர நிர்வாகிகள் நூர் முஹம்மது, நிஷார், நியாஸ் உள்ளிட்ட மஜகவினர் இப்பணியில் ஈடுப்பட்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING | #லால்பேட்டை_பேரூர் #கடலூர்தெற்குமாவட்டம்.
ஆட்டோதொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி மனித நேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் மனு..!
. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது, பல ஆட்டோ தொழிலாளர் குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பொருளாதாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் இச்சூழலில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் M.H.ஜாபர் அலி அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில் உள்ளதாவது... மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு.. கடந்த 24.03.2020 முதல் கொரானா எனும் கொடிய நோயின் காரணமாக மத்திய அரசின் உத்தரவின் படி மக்களின் நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் படுத்தி உள்ளீர்கள். இதனால் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் 21 நாட்களுக்கு மேலாக எந்த வேலையும் இன்றி முடங்கி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ .1000 உதவித்தொகையும் அரிசி உள்பட நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு அறிவித்தது, இந்த அறிவிப்பானது மார்ச் 31 வரையிலான 7 நாட்களுக்கு மட்டுமே அறிவித்தது, மத்திய
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : கோவை-திருச்சி சாலை பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!
#உண்மையான மக்கள் பணியாளர் நீங்கள்தான் பொதுமக்கள் பாராட்டு!! கோவை:ஏப்.14., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து கோவை திருச்சி சாலை யில் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் மற்றும் வங்கிகளிலும் சென்று மஜக வினர் கிருமி நாசினி தெளித்தனர். இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கூறியதாவது உண்மையான மக்கள் பணியாளர்கள் நீங்கள்தான் ஆபத்து நேரங்களில் கூட மக்கள் பணியாற்ற தங்களால் மட்டுமே இயலும் என மஜக வினரின் இப்பணியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 13.04.2020
மஜக சார்பில் துப்புரவு பணியாளர்களைக் கௌரவித்து நலஉதவிகள்!
ஏப்.14, நாகை மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் பணிபுரியும் பதினைந்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு அஞ்சி தங்கள் பகுதிகளை அடைத்து கொண்டு நோய் தொற்றால் இறந்தவரின் சடலத்தை உற்றார், உறவினர்கள் கூட பெற்றுக் கொள்ள முன் வராத சூழல் நாட்டில் பல இடங்களில் நிலவி வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி கிருமிநாசினிகளை தெளித்து மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காகப் பணியாற்றி வருகின்றனர். அத்தகையப் பணியாளர்களைப் மஜக சார்பில் பாராட்டி கௌரவிக்கும் விதமாக நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் தலைமையில் சால்வை அணிவித்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிடும் நிகழ்வு சமூக விலகலையும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடித்து நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக அழைப்பை ஏற்று மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பாஸ்கரன், அனைத்து ஜமாத் பிரமுகர்கள் நாசர், தௌஃபிக், புர்கான், ஹலிக்குல் ஜமான், அலாவுதீன் மற்றும் மஜக கிளை செயலாளர் ஷேக் அலி, யாசர், மெய்தீன் ஷா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், மு.ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கிருமி நாசினி தெளிப்பு, கபசுரக்