ஆட்டோதொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி மனித நேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் மனு..!

.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது, பல ஆட்டோ தொழிலாளர் குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பொருளாதாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வரும் இச்சூழலில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் M.H.ஜாபர் அலி அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அம்மனுவில் உள்ளதாவது…

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு..

கடந்த 24.03.2020 முதல் கொரானா எனும் கொடிய நோயின் காரணமாக மத்திய அரசின் உத்தரவின் படி மக்களின் நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் படுத்தி உள்ளீர்கள். இதனால் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் 21 நாட்களுக்கு மேலாக எந்த வேலையும் இன்றி முடங்கி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ .1000 உதவித்தொகையும் அரிசி உள்பட நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு அறிவித்தது,

இந்த அறிவிப்பானது மார்ச் 31 வரையிலான 7 நாட்களுக்கு மட்டுமே அறிவித்தது, மத்திய அரசு 21 நாட்கள் முழு அடைப்பை அறிவித்தது. அதற்குப்பின் எவ்வித நிவாரணத் தொகையும் உயர்த்தி அறிவிக்கப்படவில்லை மாநில அரசு அறிவித்த நிவாரணத் தொகையை நலவாரியத்தில் பதிவு செய்து உரிமம் புதுப்பித்து இருந்தால் மட்டுமே நிவாரணத் தொகையை வழங்க அறிவித்தது.

தமிழகத்தில் மட்டும் 2.85 லட்சம் ஆட்டோ ஓட்டுனர் உள்ளனர். டிங்கர் பெயிண்டர் பழுது பார்ப்பர் என ஆட்டோ தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 13,500 ஆட்டோக்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் 15,000 பேர் இத்தொழிலை நம்பி உள்ளனர். ஆட்டோ நலவாரியத்தில் ஆட்டோ ஓட்டுனர், சரக்கு ஆட்டோ ஓட்டுனர் என மொத்தமாக 4000 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதில் புதுப்பிக்காத அவர்களும் வங்கி கணக்கை இனைக்காதவர்களும் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, ஒரு வேளை உணவுக்குக் கூட கையேந்தும் நிலையில் உள்ளனர். ஆகவே மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் ஆட்டோ தொழிலாளர்களின் வேதனைகளையும் பாதிப்புகளை உணர்ந்து ஓட்டுனர் உரிமை உள்ள அனைவருக்கும் ரூ.5000 மற்றும் நிவாரண பொருட்கள் கிடைக்க வேண்டி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..