ஏப்.15,
இன்று கடலூர் தெற்கு, லால்பேட்டை பேரூர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்த மூலிகை மருந்தான ‘கபசுர குடிநீர்’ மஜகவினால் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
மஜக அவசர ஊர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டு மெயின்ரோடு, புது பஜார், ஸ்கூல் தெரு, கொத்தவால் தெரு, பனேஷா பள்ளி, இக்பால் வீதி, வடக்கு தெரு, மேலத்தெரு போன்ற வீதிகளிலும், தொடர்ந்து மாலை நேரத்தில் கொல்லமலையிலும் பொதுமக்கள் இல்லங்களைத் தேடி சென்று வழங்கியதால் ஆர்வமுடன் வாங்கிப் பருகினர்.
இதில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹுசைன், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, நகர செயலாளர் ஜாபர் சாதிக், நகர பொருளாளர் யூனுஸ், நகர துணை செயலாளர் பிரபு, நகர நிர்வாகிகள் நூர் முஹம்மது, நிஷார், நியாஸ் உள்ளிட்ட மஜகவினர் இப்பணியில் ஈடுப்பட்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING | #லால்பேட்டை_பேரூர்
#கடலூர்தெற்குமாவட்டம்.