மஜக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்


சென்னை.ஏப்ரல்.16.,

இந்தியா முழுவதும் கடந்த 23 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஏழை எளியோருக்கு விநியோகித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மஜக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக வில்லிவாக்கம், சூளைமேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு அத்தியாவசிய பொருட்களை பல கட்டங்களாக விநியோகித்து வருகின்றனர்.

மேலும் கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருபவர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டை உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தனர்.

இதுவரை 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக விநியோகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைமேற்கு
16-04-2020

Top