திமுக துறைமுகம் தொகுதி வேட்பாளர் பி கே சேகர் பாபு அவர்களை ஆதரித்து..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பிரச்சாரம்..!!


சென்னை.மார்ச்.24.,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.கே சேகர்பாபு அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மண்ணடி ஆயிஷா மஹாலில் வேட்பாளர் அறிமுக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பொருளாளர் பேசுகையில், திமுக கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள மக்கள் விரோத சட்டங்களான குடியுரிமை திருத்த சட்டம், புதிய வேளாண் சட்டம், மருத்துவப் படிப்பை சீரழிக்கும் நீட் தேர்வு, ஆகியவற்றை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றும், அச்சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது, எனவே நாம் மக்கள் நலன் கருதி திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், திருமங்கலம் ஜெ.ஷமீம் அகமது, இளைஞரணி மாநில செயலாளர் முகம்மது அசாருதீன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக, துறைமுக தொகுதி வேட்பாளர் P.K.சேகர் பாபு அவர்கள் பேசுகையில் மனிதநேய ஜனநாயக கட்சி எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மதச்சார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டு எங்களுடன் களப்பணி ஆற்றிய தோழர்களுக்கு வாழ்த்துக்களை கூறி சிறுபான்மையினர்களின் வாக்குகள் சிதறாமல் திமுக கூட்டணிக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் புதுபேட்டை T.M.யூசுப் , துறைமுக பகுதி நிர்வாகிகள் அபூபக்கர் , தாஹா , குப்பை சீனி முஹம்மது, அஸ்கர் அலி, அம்ஜத் ஜூனைது, துறைமுகம் சிக்கந்தர் , முஹம்மது இஸ்மாயில் , சேக் முகைதீன் , அசன் அலி உள்ளிட்ட பகுதி , வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#தகவல்_தொழினுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK2021
#TNElection2021
#மத்திய_சென்னை_கிழக்கு
23.03.2021