ஏப்.14,
நாகை மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் பணிபுரியும் பதினைந்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு அஞ்சி தங்கள் பகுதிகளை அடைத்து கொண்டு நோய் தொற்றால் இறந்தவரின் சடலத்தை உற்றார், உறவினர்கள் கூட பெற்றுக் கொள்ள முன் வராத சூழல் நாட்டில் பல இடங்களில் நிலவி வருகிறது.
இந்நிலையில் தினந்தோறும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி கிருமிநாசினிகளை தெளித்து மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காகப் பணியாற்றி வருகின்றனர்.
அத்தகையப் பணியாளர்களைப் மஜக சார்பில் பாராட்டி கௌரவிக்கும் விதமாக நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் தலைமையில் சால்வை அணிவித்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிடும் நிகழ்வு சமூக விலகலையும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடித்து நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மஜக அழைப்பை ஏற்று மஞ்சக்கொல்லை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பாஸ்கரன், அனைத்து ஜமாத் பிரமுகர்கள் நாசர், தௌஃபிக், புர்கான், ஹலிக்குல் ஜமான், அலாவுதீன் மற்றும் மஜக கிளை செயலாளர் ஷேக் அலி, யாசர், மெய்தீன் ஷா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும், மு.ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கிருமி நாசினி தெளிப்பு, கபசுரக் குடிநீர் விநியோகம் போன்ற பணிகளை முன்னெடுத்து வரும் மஜக வின் பணிகளைப் பாராட்டி நன்றி தெரிவித்து கொண்டார். இதில் இக்பால், பரக்கத் அலி, யாகத் அலி, குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
13.04.2020