ஏப்.12,
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தோப்புத்துறையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த மக்களுக்கு கபசுர குடிநீரை மஜகவினர் விநியோகம் செய்தனர்.
மேலும், தேவைபடும் நபர்களின் இல்லங்களுக்கும் கொண்டு சென்று விநியோகித்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் இக்குடிநீரை விநியோகம் செய்ததுடன், வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தையும், வெளியே வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் அவசியம் குறித்தும் எடுத்து கூறி விழிப்புணர்வு செய்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
11.04.2020