மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அறிக்கை! தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் பரிசளித்து இருக்கிறார்கள். 234 இடங்களில் 163 இடங்களை இக்கூட்டணிக்கு வழங்கி தெளிவான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் வடக்கத்திய அரசியல் படையெடுப்பை தடுத்து நிறுத்தி, பாஜகவோடு யார் கூட்டணி வைத்தாலும் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக் கூட நெருங்க முடியாது என்ற செய்தியை தமிழகம் உணர்த்தியிருக்கிறது. மாபெரும் இந்த வெற்றிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான களப்பணிகளின் மூலம் அயராது உழைத்த திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் உழைப்பு அளவிட முடியாதது. தன் இளமைக் காலம் முதல், தமிழக மக்களுக்காக பல வகையிலும் உழைத்த அவருக்கு, மக்கள் தற்போது முதல்வர் பதவியை அளித்து கௌரவித்து இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தை தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்தி செல்லும் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார். அதுபோல் மேற்கு வங்கத்தில் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் எதிர்கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈட்டிய பெரும் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாகும். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில்
Tag: M.தமிமுன் அன்சாரி
குவைத்தில் பரிதவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்!
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அங்கும் வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் வாடுகின்றனர். அவர்களில் உரிய ஆவணம் இன்றி பணியாற்றி வரும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அவர்களுக்கு வேலையோ, தங்குமிடமோ இல்லாத நிலையில், அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை குவைத் செயல்படுத்தியது. அதற்கு விண்ணப்பித்தோரில் 7340 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு தற்காலிக இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, எந்த நேரமும் இந்தியா திரும்ப வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்காமல் தெருக்களில் உணவின்றி வாடி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையாக நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு பொது மன்னிப்பு பெற்றவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழர்கள் உள்ளிட்ட 7340 இந்தியர்களும் தாயகம் திரும்புவதற்காக ஒரு மாதத்திற்கும்
புதிய சூழலில் சிக்கனமாக வாழகற்றுக் கொள்வோம் : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!
மே 10, ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) யின் செயற்குழு உறுப்பினர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் Z00M காணொளி மூலம் கலந்துரையாடினார். அவருடன் மண்டலப் பொறுப்பாளரும், மஜக இணைப் பொதுச் செயலாளருமான J.S.ரிபாயி அவர்களும் பங்கேற்றார். இந்த அமர்வுக்கு அமீரக செயலாளர் நாச்சிகுளம் A.அசாலி அஹ்மது தலைமையேற்றார். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... https://m.facebook.com/story.php?story_fbid=2454700774629683&id=700424783390633 கொரணா நோய் தொற்று உலகில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகமே பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. இதன் பாதிப்பு இந்த ஆண்டோடு முடியாது. அடுத்தாண்டு வரை தொடரும். ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறை, ஆடம்பர பொருள்களின் உற்பத்தி துறைகள் பெரும் சரிவை சந்திக்கும். பிற தொழில்கள் மீள பல மாதங்கள் ஆகலாம். இதன் காரணமாக வேலை இல்லாத் திண்டாட்டம், பசி, வறுமை என பல பிரச்சனைகள் உருவாகும். உலகளாவிய பாதிப்பு காரணமாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அநேகம் பேர், தாயகம் திரும்பக்கூடிய சூழல் ஏற்படலாம். குறைந்தது 10 லட்சம் பேர் தாயகம் திரும்பினால், அது பெரும் பொருளாதார நெருக்கடியை இந்தியாவில் உருவாக்கி விடும். ஏனெனில் நம்
தப்லீக் கைதிகள் மீதான வழக்குகள் திரும்பபெறவேண்டும் : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!
மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த 130-வுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் பயணிகளை கைது செய்து தமிழக அரசு சிறையிலடைத்துள்ளது. விசா விதிமுறை தொடர்பான குழப்பம் மட்டுமே அவர்கள் மீதான பிரதான குற்றச் சாட்டாகும். ஆனால், சம்மந்தமில்லாத வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ளது. தற்போது புழல் சிறையிலிருந்த அவர்களை எவ்வித வசதிகளும் இல்லாத சைதாப்பேட்டை கிளை சிறைக்கு மாற்றியுள்ளனர். அவர்கள் கடத்தல் கும்பலையோ, மாஃபியா கும்பலையோ சேர்ந்தவர்கள் அல்ல. பிறரிடம் மதப் பரப்புரை செய்ய வந்தவர்களும் அல்ல. அவர்கள் மிகவும் சாதுவான குணாதிசயங்களை கொண்ட ஆன்மீக சுற்றுலாவாசிகள் மட்டுமே. ஈரோட்டில் கைது செய்யப்பட்ட பயணிகள் சிலர் ஜாமீன் பெற்று வந்துள்ளனர். அப்போதும் அவர்களை தடுப்பு முகாம்களில் தான் இருக்க வேண்டும் என சொல்வது ஏற்க முடியாதது. கர்நாடக மாநிலத்தில் அப்படி ஜாமீன் பெற்று வந்தவர்கள் அரசின் ஹஜ் இல்லத்தில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொள்வதோடு, வெளிநாட்டு தப்லீக் ஆன்மீக பயணிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்று, அவர்களை அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்
காச நோய் துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLAஅறிக்கை!
காசநோய் தடுப்பு திட்டமானது இந்தியாவில் 2000 வருடத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பது, பரிசோதனை மேற்கொள்வது, சமூகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதென பல்வேறு பணிகளை காசநோய் தடுப்பு திட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். காற்றின் மூலம் பரவும் காசநோய் தொற்றை கூட பொருட்படுத்தாமல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், இவர்களுக்கு எந்த ஒரு பணிப் பாதுகாப்பும் கிடையாது. காசநோய் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ காப்பீடு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, விபத்து காப்பீடு, ஊதிய உயர்வு போன்ற எதுவும் கிடையாது. கள பணியின் போது விபத்துக்கள் நடைபெற்று 10 க்கு மேற்பட்ட பணியாளர்கள் இறந்து உள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு அரசால் ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காசநோயை பிசிஆர் முறையில் கண்டறியும் சீபிநாட் மற்றும் ட்ரூநாட் எனப்படும் பரிசோதனை முறை கருவிகளை கொண்டுதான் மிகவும் சவாலாக இருக்கும் கொரோனா கண்டுபிடிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றது. காசநோய் கிருமியை கண்டுபிடிக்க பயன்படுத்தபடும் இயந்திரத்தை கொரோனா நோய் கிருமி கண்டுபிடிக்க பயன்படுத்துவது போல், காசநோய் துறை பணியாளர்களை எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனா