மே 10,
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) யின் செயற்குழு உறுப்பினர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் Z00M காணொளி மூலம் கலந்துரையாடினார்.
அவருடன் மண்டலப் பொறுப்பாளரும், மஜக இணைப் பொதுச் செயலாளருமான J.S.ரிபாயி அவர்களும் பங்கேற்றார்.
இந்த அமர்வுக்கு அமீரக செயலாளர் நாச்சிகுளம் A.அசாலி அஹ்மது தலைமையேற்றார்.
இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…
https://m.facebook.com/story.php?story_fbid=2454700774629683&id=700424783390633
கொரணா நோய் தொற்று உலகில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. இதன் பாதிப்பு இந்த ஆண்டோடு முடியாது. அடுத்தாண்டு வரை தொடரும்.
ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறை, ஆடம்பர பொருள்களின் உற்பத்தி துறைகள் பெரும் சரிவை சந்திக்கும். பிற தொழில்கள் மீள பல மாதங்கள் ஆகலாம்.
இதன் காரணமாக வேலை இல்லாத் திண்டாட்டம், பசி, வறுமை என பல பிரச்சனைகள் உருவாகும்.
உலகளாவிய பாதிப்பு காரணமாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அநேகம் பேர், தாயகம் திரும்பக்கூடிய சூழல் ஏற்படலாம்.
குறைந்தது 10 லட்சம் பேர் தாயகம் திரும்பினால், அது பெரும் பொருளாதார நெருக்கடியை இந்தியாவில் உருவாக்கி விடும்.
ஏனெனில் நம் நாட்டிற்கு அன்னிய வருவாயை ஈட்டிக் கொடுத்தவர்கள் அவர்கள்தான்.
அப்படி தாயகம் திரும்புபவர்கள் அதிக பட்சம் 3 மாதங்கள் நிலைமையை சமாளிக்க முடியும்.
அதன் பிறகு வாழ்வியல் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.
எனவே சிக்கனமான முறையில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். செலவுகளை 50 சதவீதமாக குறைத்துக் கொள்ளுங்கள். தாயகத்தில் உள்ள உங்கள் குடும்பங்களிடம் இதை வலியுறுத்துங்கள். இது தவிர்க்க முடியாதது என்பதை சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
அடுத்துப் பேசிய இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி அவர்கள் கொரணா நோய் தொற்றில் நாம் பின்பற்றும் நடைமுறைகள் அவசியமானவை என்றதோடு, கிடைத்திருக்கும் இந்த ஊரடங்கு சூழலை பயன்படுத்தி, புனித ரமலானில் நம்மை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் அமீரக மண்டல பொருளாளர் H.அபுல் ஹசன்,துணை செயலாளர்கள் ஹாஜி S.A.முகம்மது தையூப், B.ரஹ்மத்துல்லா, H.ஹம்தான், கொள்கை பரப்பு செயலாளர் Y.அப்துல் ரெஜாக், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் J.சேக்தாவுது, கட்டிமேடு.ஜாகிர் உசேன், துபை மாநகர செயலாளர் V.ஷஃபிக்குர் ரஹ்மான், பொருளாளர் Z.பையாஜ் அஹமது, துணை செயலாளர்கள் Y.சலீம் ஜாப்ரித், K.M.அசாருதீன், IT Wing செயலாளர் ஷபீர் அஹமது, அல்அய்ன் மாநகர செயலாளர் S.முகம்மது இம்ரான், பொருளாளர் M.அப்துல் நாசர், துணை செயலாளர் M.அப்துல் மாலிக் அபுதாபி மாநகர நிர்வாகிகள் J.S.அபு ஹக்கீம், A.லியாக்கத் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மனிதநேயகலாச்சாரபேரவை
#MKPதகவல்தொழில்நுட்பஅணி –
#MKPitWing | #ஐக்கியஅரபுஅமீரகம்.
09/05/2020