சென்னை மேடவாக்கத்தில் அமைந்திருக்கும் காயிதே மில்லத் கல்லூரியில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. காயிதே மில்லத் அவர்களின் பேரனும், கல்லூரியின் தாளாளருமான தாவூத் மியாகான் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சாரணர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு :- https://m.facebook.com/story.php?story_fbid=2240614932704936&id=700424783390633 இன்று இந்தியாவின் 71 வது குடியரசு தின விழாவை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே நமது நாட்டின் சிறப்பாகும். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள் இவற்றின் கதம்பமாக நம்நாடு இருக்கிறது. வேறுபட்ட நிலவியல் அமைப்புகளையும் கொண்ட நாடு இதுதான். அதனால் தான் இந்தியாவை துணைக் கண்டம் என்றும் நாடுகளின் ஒன்றியம் என்றும் கூறி சிறப்பிக்கிறார்கள். இதை சிதைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை, சமூகங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறார்கள். கல்வியை சாமான்யர்களுக்கு கடினமாக்கி அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து ஒரு கட்டத்தில் இடஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்ய துடிக்கிறார்கள். சமூகநீதியை, மதச்சார்பின்மையை மக்கள் உரிமைகளை அழிக்க துடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒற்றை கலாச்சாரமாக்க துடிப்பது இந்தியாவின்
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
தோப்புத்துறையில் சட்டப்பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல்!
ஜன.26, 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம், தோப்புத்துறை ஆறுமுகச்சந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மருதநாயக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இணைந்து இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மஜக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் அவர்கள் சட்டப் பாதுகாப்பு உறுதி மொழியை வாசிக்க கலந்துக் கொண்ட அனைவரும் திரும்ப கூறி உறுதி ஏற்றனர். இதில், எம்எஸ்எஃப் தலைவர் முகமது இம்தியாஸ் வரவேற்புரையாற்றிட அப்துல் கபூர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இறுதியில் எம்எஸ்எஃப் செயலாளர் அகமது ரய்யான் நன்றி கூறிட கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக்மன்சூர், நகர துணை செயலாளர் முருகானந்தம், ஷேக் அமானுல்லாஹ் உட்பட திரளான மஜகவினரும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
ஆக்கூர்,மடப்புரம் ஊராட்சிகளின் கிராமசபாவில் மஜக சார்பாக, குடியுரிமைசட்டத்திற்கெதிராக மனு!
ஜன.26, 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஆக்கூர் மற்றும் மடப்புரம் ஊராட்சிகளில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில்.. தேசத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் CAA சட்டத்தை கைவிட வேண்டும். மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் உருவாக்கும் NRC மற்றும் NPR பதிவுகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், 5 மற்றும் 8 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்களின் கருத்தை கேட்காமலே நடைமுறை படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, ஆக்கூர் பேருந்து நிலையம் அருகில் CPI(M) தரங்கபாடி வட்டக் குழு சார்பில் இந்திய மக்களை பிளவுப்படுத்தும் CAA சட்டத்தை வாபஸ் பெற கோரி குடியரசு தினத்தை முன்னிட்டு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்விலும், ஆக்கூர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் திரளாகப் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைவடக்குமாவட்டம்.
ஆதலையூர் மற்றும் மஞ்சக்கொல்லை கிராமசபா கூட்டத்தில், CAAவுக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்த மஜக!
ஜன.26, நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதலையூரில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்ற மஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை முன் மொழிந்து மனு அளித்தனர். இதில், மஜக மாவட்ட துணை செயலாளர் முன்ஷி யூசுப்தீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் நிசாத், ஆதலையூர் கிளை செயலாளர் பாவா, சமிம், சிராஜ், சிபான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைப்போல், நாகப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சக்கொல்லை ஊராட்சியில் நடைப்பெற்ற கிராமசபா கூட்டத்திலும் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை முன்மொழிய வலியுறுத்தப்பட்டது. இதில், நாகை ஒன்றிய பொறுப்பாளர் மஞ்சை சதாம், கிளை செயலாளர் ஷேக்அலி உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு மனு அளித்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
பெரியாக்குறிச்சி கிராமசபா கூட்டத்தில், குடியுரிமை சட்டத்திற்கெதிரான தீர்மானத்தை மஜக முன்மொழிந்தது!
ஜன.26, கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாக்குறிச்சியில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் நடைப்பெற்றது. இதில், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இபுராஹீம், நெய்வேலி நகர செயலாளர் நூர்முகம்மது, பொருளாளர் ஜாகிர் ஹீசைன், மதார், விசிக ஜோதிபாசு ஆகியோர் இணைந்து CAA சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன் மொழிந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம்.