ஆக்கூர்,மடப்புரம் ஊராட்சிகளின் கிராமசபாவில் மஜக சார்பாக, குடியுரிமைசட்டத்திற்கெதிராக மனு!

ஜன.26,

71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஆக்கூர் மற்றும் மடப்புரம் ஊராட்சிகளில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மனுவில்..

தேசத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் CAA சட்டத்தை கைவிட வேண்டும். மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் உருவாக்கும் NRC மற்றும் NPR பதிவுகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், 5 மற்றும் 8 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்களின் கருத்தை கேட்காமலே நடைமுறை படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, ஆக்கூர் பேருந்து நிலையம் அருகில் CPI(M) தரங்கபாடி வட்டக் குழு சார்பில் இந்திய மக்களை பிளவுப்படுத்தும் CAA சட்டத்தை வாபஸ் பெற கோரி குடியரசு தினத்தை முன்னிட்டு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்விலும், ஆக்கூர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் திரளாகப் பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைவடக்குமாவட்டம்.