மஜக காயல்பட்டிணம் நகரம் சார்பாக குடியரசுதினகொடியேற்றும் நிகழ்ச்சி.!

மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நகரம் சார்பாக 71-வது குடியரசு தின கொடியேற்றும் நிகழச்சி காயல்பட்டிணம் புதிய பேருந்து நிலையத்தில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நகரச் செயலாளர் ஜிபுரி அவர்கள் தலைமையில் நகரப் பொருளாளர் மீரான் அவர்கள் முன்னிலையில் மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் தேசியக் கொடியேற்றினார்கள்.

மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப் அவர்கள் உறுதி மொழி வாசிக்க அனைவரும் இந்திய அரசியல் சாசன சட்டத்தை பாதுகாப்போம் என உறுதி மொழியேற்றனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், நகர நிர்வாகிகள் இப்னுமாஜா, சிக்கந்தர்பாஷா, அப்துர்ரஹ்மான், மகுதூம், இர்ஷாத், ராசிக் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_மாவட்டம்
26.01.2020