திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை -பாலாக்குடி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மஜக அலுவலகத்தில் நடைபெற்றது. கிளையின் MJVS செயலாளர் SMH சாதிக் பாதுஷா முன்னிலையில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பட்டக்கால் குத்துப்தீன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில், அத்திக்கடை பாலாக்குடி நிர்வாகிகள் சையது சலீம் உமர், முகமது ரஃபீக், முகமது பைசல், ரிஸ்வான் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
Tag: இந்தியா
பொள்ளாச்சியில் மஜகவின் சார்பில் 75வது சுதந்திர தின நிகழ்ச்சி!
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை யொட்டி பொள்ளாச்சி நகர மனிதநேய ஜனநாயக கட்சி நகர அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரச் செயலாளர் அ.ராஜா ஜெமீஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மெளலானா. முகமது இஸ்மாயில் தேசிய கொடி ஏற்றினார், அப்பொழுது உறுதி மொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்பு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பொள்ளாச்சி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்க தலைவர் ஹாஜி.முகமது யூசுப் அவர்கள் குழந்தை களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் நகர பொருளாளர் முகம்மது பஷீர், நகர துணை செயலாளர்கள் அன்சார், அப்துல் காதர், நகர MJTS தலைவர் அஷ்ரப் அலி, நகர இளைஞர் அணி செயலாளர் அலாவுதீன், நகர MJVS பொருளாளர் சிராஜுதீன்,15வது வார்டு செயலாளர் அப்பாஸ், ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் அலாவுதீன், காதர் இப்ராஹிம், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி செயலாளர் மன்சூர், துணை செயலாளர் காதர் மைதீன், அம்பராம் பாளையம் ஊராட்சி செயலாளர் மைதீன், ஊராட்சி பொருளாளர் இப்ராஹிம், தொப்பம்பட்டி ஊராட்சி பொறுப்பாளர் விஜயகுமார், மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #பொள்ளாச்சி_நகரம் #கோவை_மாவட்டம் 15.08.2021
திருப்பூரில் மஜகவின் சுதந்திர தின விழா கொடியேற்றம்!
இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் தேசியக் கொடி ஏற்று விழா மாவட்ட பொருளாளர் கண்ணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் மஜீத், அவர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் இப்ராகிம், ஷேக் அப்துல்லா, ஷேக் ஒலி, கூத்தம் பாளையம் கிளை நிர்வாகிகள் பைஜுர்ரஹ்மான், உசேன், சாதிக் பாட்ஷா, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_வடக்கு_மாவட்டம் 15.08.2021
அச்சன்புதூரில் மஜகவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அச்சன்புதூர் ஜூம்ஆ பள்ளிவாசல் ,மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் ஜமாத் தலைவர் R۔உக்காசி மீராக்கனி, தேசிய கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் மு.பீர்மைதின், ஜமாத் பொருளாளர் சேகுமைதீன், தப்லிக் ஜமாஅத் நூகு முகமது, அகமது மீரான், கான்மல்க்கர், சாகுல்ஹமீது, உலமாக்கள், அப்துல் கனி, ஜியாவுதீன், ஆலிமா ரெஜினா, மதரசா ஆசிரியர்கள் மற்றும் அச்சன்புதூர் மஜக நிர்வாகிகள் அன்வர் ,சேக் முகமது, முஹமது நாசர்,சபிக் செய்யது, மற்றும் மாணவ, மாணவிகள், திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தென்காசி_மாவட்டம் 15.08.2021
கோவையில் 75வது சுதந்திர தின விழாகொண்டாட்டம்! மஜக சார்பில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்!
இந்திய தேசத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் நவ்ஃபல் பாபு, ஹாருண், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் பைசல் ரகுமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம் சேட்டு, மத்திய பகுதி பொறுப்பாளர் ஹனிபா, ஆகியோர் கலந்து கொண்டு உக்கடம், பெரியகடைவீதி, குறிச்சி பிரிவு, குனியமுத்தூர், சுகுணாபுரம், செல்வபுரம், ஆகிய பகுதிகளில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வுகளில் கிணத்துக்கடவு, தெற்கு பகுதி, நிர்வாகிகள், மற்றும் குனியமுத்தூர், சுகுணாபுரம், செல்வபுரம், கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாட்டம் 15.08.2021