You are here

அச்சன்புதூரில் மஜகவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அச்சன்புதூர் ஜூம்ஆ பள்ளிவாசல் ,மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் ஜமாத் தலைவர் R۔உக்காசி மீராக்கனி, தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் மு.பீர்மைதின், ஜமாத் பொருளாளர் சேகுமைதீன், தப்லிக் ஜமாஅத் நூகு முகமது, அகமது மீரான், கான்மல்க்கர், சாகுல்ஹமீது, உலமாக்கள், அப்துல் கனி, ஜியாவுதீன், ஆலிமா ரெஜினா, மதரசா ஆசிரியர்கள் மற்றும் அச்சன்புதூர் மஜக நிர்வாகிகள் அன்வர் ,சேக் முகமது, முஹமது நாசர்,சபிக் செய்யது, மற்றும் மாணவ, மாணவிகள், திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தென்காசி_மாவட்டம்
15.08.2021

Top