பிப்.28, திருப்பூரில் மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கெதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது: அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளை காப்பாற்றுவதற்காக நீண்ட நெடிய போராட்ட களத்தில் நிற்கிறோம். உண்ணுவதற்கும், உறங்குவதற்கும், சம்பாதிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதைப் போல் இனி போராடுவதற்கும் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். மாதத்தில் சமையலுக்கும், கேஸ், மின்சாரம், குடிநீர் ஆகியவற்றிற்கு ஒரு தொகையை ஒதுக்குவது போல் இனி போராட்டத்திற்கும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும். ஏனெனில் இப்போராட்டம் இப்பொழுது நிறைவு பெறுவதாக தெரியவில்லை. மத்திய அரசின் பிடிவாதமும், பிரதமரின் ஆணவமும் மாறுவதாக தெரியவில்லை. அகன்ற மார்பு கொண்ட பிரதமரிடம் சின்ன சிறிய இதயமில்லாமல் போய்விட்டது. அவர்கள் போராட்டங்களை புரிந்து கொள்ளவில்லை. பிடிவாதம் பிடிக்கிறார்கள். https://m.facebook.com/story.php?story_fbid=2300894996676929&id=700424783390633 மக்களின் உரிமைப் போராட்டங்களை சிதைக்க துடிக்கிறார்கள். டெல்லியில் வன்முறைகளை சங்பரிவார் ஆதரவு கூலிப் படையினர் திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள். கபில் மிஸ்ராவின் டிவிட்டர் பதிவுகளை பார்த்தவுடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? இந்த கலவரங்களை கண்டித்து அவர்கள் மீது FIR பதிவு செய்ய சொல்லி உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்களை இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்து
Month:
மஜகவின் வாழ்வுரிமை மாநாட்டுப் பணிகளில் கடும் உழைப்பைக் கொடுத்த MJTS தொண்டர்கள்!
பிப்ரவரி 29 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவையில் வாழ்வுரிமை மாநாட்டில்,.மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) பணிகள் மகத்தானது. கோவையில் "புதியபாதை" என்ற பெயரில் ஏறத்தாழ 250 மீட்டர் ஆட்டோக்கள் மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பாக இயங்கி வருகிறது. மாநாடு அறிவிக்கப்பட்ட மறுநாளே சுமார் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மாநாட்டின் விளம்பர ப்ளக்ஸ்கள் பொருத்தி கோவை மாநகர் முழுவதும் வலம் வந்தனர். மாநாட்டின் துண்டு பிரசுரங்களை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் வினியோகித்து மக்கள் மத்தியில் மாநாட்டின் செய்திகளை கொண்டு சேர்த்தனர். அதுமட்டுமில்லாமல் வித்தியாசமாக புதிய பாதை தகவல் மையத்திற்கு ஆட்டோ புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களிடமும் அலைபேசியிலேயே மஜக வின் மகளிர் அணியினர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை அனைத்து மக்களும் பாராட்டினர். மாநகர் பகுதியில் வாகன நெரிசலில் சிக்கி மாநாட்டு திடலை அடைய முடியாத பல மக்களை, உடனுக்குடன் சென்று அழைத்துக்கொண்டு மாநாட்டுத் திடலை நோக்கி விரைந்து வந்தனர் . MJTS மூலம் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களில் மாநகர மக்கள் திடலுக்கு அழைத்து வரும் இப்பணிகளில் தொழிற்சங்கத்தினர் சிறப்பாக ஈடுபட்டனர்.. மேலும் மனிதநேய தொழிற்சங்கத்தினர் இளைஞர் அணியின் தேவையை கருதி,
கோவை வாழ்வுரிமை மாநாட்டை உறுதுணையாக இருந்து வெற்றியாக்கிய இளைஞரணியினரின் பணிகள்.!!
கோவை மாவட்டத்தில் கடந்த பிப்.29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வாழ்வுரிமை மாநாடு நடைப்பெற்றது. மாநாட்டில் ஒட்டு மொத்த திடல் பணிகளை மஜக இளைஞரணியினர் மேற்கொண்டனர். கடந்த பத்து நாட்களாக திட்டமிட்டு 300-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் தலைமையில் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மஜக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அப்பாஸ் அவர்களது கண்காணிப்பில் கோவை மாவட்ட மஜக இளைஞரணிச் செயலாளர் அன்சர், மாவட்டப் பொருளாளர் ஃபிரோஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம் உசேன், ஜாஃபர் சாதிக், இப்ராஹிம் ஷா, ஃபைசல், பொள்ளாச்சி நகரச் செயலாளர் அலாவுதீன் தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாநாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மாநாட்டு நாளன்று காலை முதலே சுட்டெரிக்கும் கடுமையான வெயிலில் மக்கள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு மாநாடு தொடங்குவதற்கு முன்னரே முடிவுற்றது. வெளியூரிலிருந்து வரும் மக்களுக்கு வாகன வழிகாட்ட பதினைந்திற்கும் மேற்ப்பட்ட சுங்கச்சாவடிகளில் இளைஞரணி நிர்வாகிகள் நிறுத்தப்பட்டு வாகனங்களுக்கு வழிகாட்டினர். மாலை நேரத்தில் அலைகடலென கொடிசியா நோக்கி திரண்ட வாகனங்களை சாலை நெரிசல் ஆகாமல் வாகன நிறுத்தும் இடத்தில் வரிசையாக நிறுத்தும் பணியில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இளைஞரணியினர் ஈடுபட்டனர். பெண்கள் பகுதியில் பாதுகாப்பு