பிப்.28,
திருப்பூரில் மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கெதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது:
அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளை காப்பாற்றுவதற்காக நீண்ட நெடிய போராட்ட களத்தில் நிற்கிறோம்.
உண்ணுவதற்கும், உறங்குவதற்கும், சம்பாதிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதைப் போல் இனி போராடுவதற்கும் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும்.
மாதத்தில் சமையலுக்கும், கேஸ், மின்சாரம், குடிநீர் ஆகியவற்றிற்கு ஒரு தொகையை ஒதுக்குவது போல் இனி போராட்டத்திற்கும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும்.
ஏனெனில் இப்போராட்டம் இப்பொழுது நிறைவு பெறுவதாக தெரியவில்லை.
மத்திய அரசின் பிடிவாதமும், பிரதமரின் ஆணவமும் மாறுவதாக தெரியவில்லை.
அகன்ற மார்பு கொண்ட பிரதமரிடம் சின்ன சிறிய இதயமில்லாமல் போய்விட்டது.
அவர்கள் போராட்டங்களை புரிந்து கொள்ளவில்லை. பிடிவாதம் பிடிக்கிறார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2300894996676929&id=700424783390633
மக்களின் உரிமைப் போராட்டங்களை சிதைக்க துடிக்கிறார்கள்.
டெல்லியில் வன்முறைகளை சங்பரிவார் ஆதரவு கூலிப் படையினர் திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள்.
கபில் மிஸ்ராவின் டிவிட்டர் பதிவுகளை பார்த்தவுடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?
இந்த கலவரங்களை கண்டித்து அவர்கள் மீது FIR பதிவு செய்ய சொல்லி உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்களை இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்து விட்டார்கள்.
நீதித்துறையிலும் கருங்காலிகள் நுழைந்து ஜனநாயகத்தை நாசப்படுத்துகிறார்கள்.
கலவரங்களை கண்டித்தால் ஒரு நீதிபதி மாற்றப்படுகிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்து அவரை டெல்லி உயர்நீதிமன்றத்திலேயே பணியமர்த்த வேண்டும்.
நீதிபதி நீதியை பேச கூடாதா? நீதியை கூட இங்கே முடியவில்லை.
எனவே நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க எல்லோரும் திரள வேண்டும்.
இது முக்கியமான காலக்கட்டம், சமூக நீதியை பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உள்ளது. நாட்டை பிற்போக்கு சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட துணை செயலாளர்கள் ராயல் பாஷா, முஜிபு ரஹ்மான், பாபு மற்றும் மாவட்ட இளைஞரணி, மாணவர் இந்தியா, MJVS நிர்வாகிகள், ஒன்றிய, மாநகர, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பூர்_மாவட்டம்.
27/02/2020