மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அறிக்கை! தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் பரிசளித்து இருக்கிறார்கள். 234 இடங்களில் 163 இடங்களை இக்கூட்டணிக்கு வழங்கி தெளிவான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் வடக்கத்திய அரசியல் படையெடுப்பை தடுத்து நிறுத்தி, பாஜகவோடு யார் கூட்டணி வைத்தாலும் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக் கூட நெருங்க முடியாது என்ற செய்தியை தமிழகம் உணர்த்தியிருக்கிறது. மாபெரும் இந்த வெற்றிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான களப்பணிகளின் மூலம் அயராது உழைத்த திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் உழைப்பு அளவிட முடியாதது. தன் இளமைக் காலம் முதல், தமிழக மக்களுக்காக பல வகையிலும் உழைத்த அவருக்கு, மக்கள் தற்போது முதல்வர் பதவியை அளித்து கௌரவித்து இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தை தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்தி செல்லும் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார். அதுபோல் மேற்கு வங்கத்தில் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் எதிர்கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈட்டிய பெரும் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாகும். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில்
Tag: MJK Party
மஜக வாழ்வுரிமை மாநாடு படத்தொகுப்பு
கறுப்புசட்டங்களுக்கு எதிராக புலிப்படை நிற்கும்! இராமநாதபுரத்தில் கருணாஸ் உறுமல்!
ஜனவரி 03, இராமநாதபுரத்தில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக சார்பில் மாவட்ட செயலாளர் இலியால் பங்கேற்று கண்டன உரையாற்றினார். காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் கறுப்பு சட்டங்களை கடுமையாக சாடி தனக்கே உரிய பாணியில் பேசினார். அது போல் நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசும் போது மோடி - அமித் ஷா கூட்டணியின் வஞ்சகங்களை தோலுரித்தார். இதில் முக்குலத்து புலிப் படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பங்கேற்று, 45 நிமிடங்கள் அனல் பறக்க பேசினார். கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்றவர், இப்போராட்டத்திற்கு புலிப் படை என்றும் துணை நிற்கும் என்றதும் கூட்டம் ஆராவரித்தது. பசும்பொன் தேவர் உங்களோடு உறவு பாராட்டியது போல நானும் உங்களோடு நிற்பேன் என்றதும் கூட்டம் முழக்கங்களை எழுப்பி அதை உற்சாகமாக வரவேற்றது. இக்கூட்டத்திற்கு தேவர் சமுதாய மக்கள் திரண்டு வந்து வலு சேர்ந்தனர். முக்குலத்தோர் புலிப் படையினர் ஏராளமான வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இந்நிகழ்வில் நவாஸ் கனி MP, இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஆலம், உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இது பல இன மக்களையும், பல தரப்பினரையும்
அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாக குழு கூட்டம்…!
அதிரை.அக்.30., அதிராம்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ். அப்துல் சலாம் அவர்கள் தலைமையில் நகர அலுவலகத்தில் 29/10/2018 திங்கள்கிழமை மதியம் 1:30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் கலந்து கொண்டார். இந்தியாவின் கருப்பு நாள் பாபர் மசூதி இடிப்பு தினம் #டிசம்பர்_06 அன்று தஞ்சையில் இராணுவ விமான நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதிரையில் எதிர்கால கட்சியின் செயல்பாடு குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிரை பொறுப்பு குழு தலைவர் S.M.அப்துல் சமது, பொறுப்பு குழு து.தலைவர் M.முகம்மது யூசுப்,குவைத் மண்டலம் முன்னாள் து.செயலாளர் பைசல் அஹமது , அஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
எழுச்சியோடு நடைபெற்ற மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்..!
கோவை.ஜுலை.14., #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) #கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் Pm.முகம்மது ரபீக், KA.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், திரளாணோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வருகின்ற 29.07.18 அன்று பிரம்மாண்டமாக மாவட்ட அலுவலக திறப்பு விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அணி நிர்வாகங்கள், நகரம், பகுதி நிர்வாகங்கள் சார்பில் கட்சி வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜககோவை_மாநகர்_மாவட்டம் 13.07.18