இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளிநாடு வாழ் தமிழக மக்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிர் இழந்து அவர்களது உடல் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரும்போது, அங்கு கால தாமதம் செய்யப்படுவது குறித்து கடிதம் வழங்கினார். இது குறித்து அமைச்சர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அதுபோல் அங்கு இறக்கும் தொழிலாளர்களுக்கு கேரளாவைப் போல தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேஷிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தமிழ் பிரதிநிதிகளை நியமிப்பது, பர்மா தலைநகர் ரங்கூன்- சென்னை இடையே வாரந்திர விமான சேவை ஆகியவை குறித்தும் எடுத்துக் கூறினார். இதுதவிர சிறுபான்மை மக்கள் கோரிக்கைகள் குறித்தும் அந்த துறை சார்ர்ந்த அமைச்சர் என்பதால் எடுத்துரைத்தார். குறிப்பாக தனது முந்தைய சட்டசபை கோரிக்கையான, வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு விடுதி கட்டுதல், தனது கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 15 கோடி மதிப்பிலான ஹஜ் இல்லம் கட்டுதல் ஆகியவற்றை சிறுபான்மை நலத்துறை மானிய விவாதத்தில் அறிவிப்பது
Month:
தஞ்சை இஃப்தார் நிகழ்ச்சி…
தஞ்சையில் செயல்பட்டு வரும் அல்முமீன் ஆதரவற்றோர் இல்லம் 1996 முதல் இயங்கி வருகிறது. இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில், நல்ல கட்டிடத்தில், சுகாதார வசதியுடன் இச்சேவையகம் இயங்கி வருகிறது. United Economic Forum மூலம் B.S. அப்துல் ரஹ்மான் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த சேவை இல்லம், தற்போது தஞ்சை மஹாராஜா ஜவுளி குழுமத் தலைவர் ஜனாப் முகம்மது ரபீக் அவர்களின் மேற்பார்வையில் இயங்குகிறது. இன்று அங்குள்ள சிறுவர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்வில் பங்கேற்றார். நோன்பு துறப்புக்கு பிந்தைய மஹ்ரிப் தொழுகைக்கு பின்பு அவர் உரையாற்றினார். அப்போது பேசியதாவது... அனாதைகளை ஆதரிக்குமாறு திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. அல்பகரா அத்தியாயத்தில் 3 வசனங்கள் அனாதைகள் குறித்து பரிவு காட்டுகிறது. குர்ஆனின் மேலும் பல அத்தியாயங்களில் பல வசனங்கள் அனாதைகள் குறித்து சுட்டிக்காட்டுகிறது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தனது கரங்களின் இரு விரல்களை சேர்த்து காட்டி, மறுமையில் நானும் அனாதைகளை ஆதரிப்பவர்களும் இவ்வாறு இணைந்திருப்போம் என்றார்கள். ஒரு அனாதையின் தலையை அன்புடன் தடவும்போது, உங்கள் கரத்தில் எவ்வளவு முடிகள் படுகிறதோ அவ்வளவு நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என்றார்கள். அந்த அளவில் அனாதைகளை இந்த மார்க்கம் கொண்டாட சொல்கிறது. எனவே
காணொளியில் மஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் காணொளி வழியே நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை பொருளாளர் மௌலா.நாசர் அவர்கள் ஆற்றினார். கட்சிப்பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் ஆக்கப்பூர்வ கருத்துகளை கூறினர். மஜக-வின் மார்ச் 20 - ஏப்ரல் 20, 2023 நன்கொடை சேகரிப்பு மாதத்தில் தீவிர நிதி சேகரிப்பில் ஈடுபடுவது என்றும், வளர்ச்சியை முன்னிறுத்தி கிளை வாரியாக சுற்றுப்பயணங்களை நடத்துவது, இஃப்தார் மற்றும் நலத்திட்ட உதவிகளை முன்னெடுப்பது என பணிகள் வரையறுக்கப்பட்டது. நிறைவாக இணைப்பொதுச்செயலாளர் J.S.ரிஃபாயி அவர்கள் தீர்மானங்களை வாசித்தார். அவை பின்வறுமாறு: தீர்மானம் 1 அவதூறு வழக்கு ஒன்றில் குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டணையை காரணம் காட்டி, தீர்ப்பு எழுதிய மை உலர்வதற்குள் ராகுல் காந்தி அவர்களின் MP பதவியை பறித்த ஒன்றிய அரசின் நாடளுமன்ற நடவடிக்கையை இக்கூட்டம் கண்டிக்கிறது. மேலும் இந்த அவசர நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் 2 சச்சார் கமிட்டி பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் எனவும், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அது குறித்த முன் அறிவிப்புகளை
நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட துணைச் செயலாளராக, K.T.U. காஜா த/பெ; K.T.உம்மர்குட்டி, 59.4-வது.வீதி, மின் நகர், குனியமுத்தூர், கோவை,641008 அலைபேசி; 9952258875 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 25:03:2023
ராகுல்காந்தி தகுதி நீக்கம்… இது ஒரு அராஜக நடவடிக்கை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை
2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு தேர்தல் பரப்புரை பேச்சுக்காக ராகுல் காந்தி அவர்களுக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டணை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. தனது பேச்சில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று அவர் கூறிய பிறகும், நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ளவில்லை. இதனிடையே இன்று மக்களவை செயலாளர் அவர்கள், ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இது இந்திய ஜனநாயகத்தை பாழ்படுத்தும் மற்றொரு அராஜக நடவடிக்கையாகும். அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதும், உடனடியாக இன்று அவர் MP பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவர் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் நீதிமன்றம் அவகாசம் தந்து அவருக்கு பிணை வழங்கியிருக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை காரணம் காட்டி அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன? என்ற கேள்விகள் எழுகிறது. ராகுல் காந்தி அவர்கள் நடத்திய 'ஒற்றுமை யாத்திரை' ஏற்படுத்திய தாக்கம்; வலதுசாரி ஃபாஸிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கும் நிலையில்; அவர் மீண்டும் அருணாச்சலப் பிரதேசம் முதல் குஜராத் வரை அடுத்தக் கட்ட யாத்திரை போக திட்டமிட்டிருந்தார். இது ஃபாஸிஸ்ட்டுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அனைவரும்