மனிதநேய ஜனநாயக கட்சியின், இளைஞரணி மாநில துணை செயலாளராக, PMA.பைசல் த/பெ; முஹம்மது அஷ்ரப் H.15 தெற்கு ஹவுசிங் யூனிட் செல்வபுரம், கோவை 641026 அலைபேசி; 98432 26306 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 30.03.2023
Month:
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நிரந்தர பணி… தமிழக அரசு தலையிட வேண்டும்….
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பணி அமர்த்தப்பட்டு இன்று வரை தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 205 ஊழியர்கள் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய்.1500 ஊதியத்தில் பணியில் சேர்ந்தனர். தற்போது ரூபாய் 3500 முதல் ரூபாய் 7000 வரை மட்டுமே ஊதியம் பெறுகின்றனர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழக்கமாக இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 13 ஆண்டுகளாக பணிநிரந்தரம் வழங்காமல் தொகுப்பூதிய பணியாளர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அண்ணாமலை பல்கலைக்கழக நிதி துறை செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 205 தொகுப்பூதிய பணியாளர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடந்த 13.03.2023 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 20.03.2023 அன்று என்னை சந்தித்து இது சம்பந்தமாக அரசு தலையிட்டு பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 15 நாட்களாக போராடி எந்த நீதியும் கிடைக்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட முத்துலிங்கம் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் நிலை தற்கொலை செய்யும் அளவிற்கு மோசமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு உடனே தலையிட்டு அவர்களை
உறவை வளர்ப்போம்! நோன்பு கஞ்சியை சகலருக்கும் விநியோகிப்போம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் ஊழியர்களுக்காக நடைபெற்று வரும் இப்தார் நிகழ்வில் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சென்னை கிழக்கு மாவட்ட திமுக-வின் பொருளாளரும், இப்பகுதி மாமன்ற உறுப்பினருமான முகமது ஆசாத் MC., அவர்களும் பங்கேற்றார். அதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது... நோன்பு துறக்கும் இந்த நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் இறைவனால் முன்னுரிமை தரப்பட்டு அங்கீகரிக்கப்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாம், நமக்காக மட்டுமல்ல... எல்லோருக்காகவும் பிரார்த்திக்க வேண்டும். நமது நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், வளங்களோடும், மகிழ்ச்சியோடும் வாழ பிரார்த்திப்போம். நோய் நொடியின்றி, பெரும் தொற்று நோய்களிலிருந்து நாடும், மக்களும் பாதுகாக்கப்பட இறைவனிடம் பிரார்த்திப்போம். இந்த புனித ரமலான் மாதம் இறைவனின் மீதான தேடல்களையும், இறையச்சத்தையும், நமக்கு ஏற்படுத்துகிறது. இம்மாதத்தில் நற்செயல்களை செய்து; தர்மங்களை செய்து; அன்பையும், இரக்கத்தையும் வெளி காட்ட வேண்டும். நாம் நோன்பு துறக்கும்போது பருகும் இந்த நோன்பு கஞ்சியை பிற சமுதாய மக்கள் தாங்களும் உண்ண வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுக்கு கிடைக்குமா? என கேட்கிறார்கள். அவர்களை போன்றோருக்கு நோன்பு கஞ்சி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
நியமன அறிவிப்பு..
மனிதநேய ஜனநாயக கட்சியின், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளராக, M. மஹபூப் பாஷா அலைபேசி; 9344887755 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 28.03.2023
திருவாரூரில்… ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டணையை எதிர்த்தும், ராகுல் காந்தி அவர்களின் MP பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசின் நாடளுமன்ற நடவடிக்கையை கண்டித்தும் திருவாருர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் SMB.துரைவேலன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மஜக திருவாருர் மாவட்ட பொருளாளர் S. சேக் அப்துல்லா அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், மேலும் மஜக ஒன்றிய செயலாளர் அஹமது ஜலால், இளைஞர் அணி செயலாளர் அமீன், வசந்த் உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.