திருப்பத்தூர்.மே.10., வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டு, அதற்கு எதிராக போராடி உயிர் நீத்த மஜக முன்னாள் மாநில துணை செயலாளர் வாணியம்பாடி வசீம் அக்ரம் அவர்களது இல்லத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சென்று அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அவருடன் மஜக மாநில துணைச் செயலாளரும், அம்மாவட்ட மேலிட பொறுப்பாளருமான S.G.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்மல் ஆகியோரும் உடன் சென்றனர். வசிம் அக்ரம் கொலை தொடர்பான காவல்துறை செயல்பாடுகள், வழக்கு நிலை ஆகியவை குறித்தும் பேசப்பட்டது. மஜக தலைமை இவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதையும், குடும்ப நல நிதி சேகரிப்பிலும் அக்கறை எடுத்து வருவதையும் பொருளாளர் அவர்கள் வசீம் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது வசீமின் சகோதரர் தமிம், ஜாயிண்ட் ஆக்ஷன் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் நாசிர்கான், மன்சுர் அஹ்மத், மஹல்லா ஜமாத்தார்கள் மற்றும் வசீமின் உறவினர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம் 09.05.2022
Month:
வாணியம்பாடியில் மஜக இல்ல திருமண நிகழ்வுகள்..! #மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!
திருப்பத்தூர்.மே.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி நகர நிர்வாகி சாகுல் அவர்களின் திருமண விழா வாணியம்பாடி குலிஸ்தான் மஹாலிலும் அதை தொடர்ந்து நகர நிர்வாகி ரைஸ் முஹம்மது அவர்களின் தங்கை நிக்காஹ் வாணியம்பாடி பாரத் மஹாலிலும் நடைப்பெற்றது. இந்த இரு திருமண நிகழ்விலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் அப்சர் சையது, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, மாவட்ட துணை செயலாளர் ஷாநவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அக்மல் , துறைமுகம் சிக்கந்தர் ,அஸ்கர் , ஆலம் , மற்றும் பகுதி ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம் 09.05.2022
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், திருப்பூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக, A.அப்துல் காதர் மீரா, த/பெ அப்துல் மாலிக், NO,1/99, சிவா பாத்திரக்கடை வீதி, பல்லடம் ரோடு, மங்கலம், திருப்பூர் அலைப்பேசி:9629286786 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் . இவண், மு.தமிமுன்அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09.05.2022
செப்.10 தலைமைச் செயலகம் முற்றுகை… பெருமளவில் மக்களை திரட்டுக!
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்! மே.09., புதுக்கோட்டை மேற்கு மாவட்ட மஜகவின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் முகம்மது ஜான் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் பங்கேற்று செப்டம்பர் 10, தலைமைச் செயலக முற்றுகை குறித்த விவாதங்களை தொடங்கி வைத்தார். கலந்துரையாடலின் போது பொதுச் செயலாளர் அவர்கள், மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் பஸ் மற்றும் வேன்களில் மக்களை திரட்ட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் கூறினார். விரைவில் சுவர் விளம்பர மாதிரி வடிவங்கள் வழங்கப்படும் என்றும், அதன் படி விளம்பர பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். விரைவில் மாவட்ட பொதுக்குழு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அளவில் புதிய கிளை கட்டமைப்புகளை தொடங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான துரை முகம்மது அவர்கள் நன்றி கூற கூட்டம் உற்சாகத்துடன் நிறைவு பெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர்கள் அப்துல் சலாம், கோட்டை.ஹாரிஸ் ஆகிய
அனைவரின் மத மரபுகள் கலாச்சாரங்கள் மதிக்கப்பட வேண்டும்..! புதுக்கோட்டை பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி..!!
புதுகை.மே.08., புதுக்கோட்டை மேற்கு மாவட்ட மஜக விவசாய அணி செயலாளர் K.S.சலீம் அவர்களின் மகன் S.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும், மணமகள் S.தஸ்லீம் அவர்களுக்கும் இன்று புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர்கள் துரை முகம்மது, பேராவூரணி சலாம், ஏ.எம்.ஹாரிஸ் ஆகிய மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் கூறியதாவது. தமிழக கவர்னர் திரு.ரவி அவர்கள் தனது பொறுப்பை மறந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஏற்கனவே அவர் நாகாலாந்தில் பணியாற்றிய போது, அங்கு மக்களும், மக்கள் இயக்கங்களும் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தின. இவர் தமிழக மக்களுக்கு எதிரான மனப்போக்கை கொண்டிருக்கிறார். எனவே ஒன்றிய அரசு இவரை திரும்பப்பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை குறித்து தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்தது இதுவரை அக்குழு எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் இக்கோரிக்கைக்கு நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அண்ணா பிறந்த