புதுகை.மே.08., புதுக்கோட்டை மேற்கு மாவட்ட மஜக விவசாய அணி செயலாளர் K.S.சலீம் அவர்களின் மகன் S.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும், மணமகள் S.தஸ்லீம் அவர்களுக்கும் இன்று புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.
இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர்கள் துரை முகம்மது, பேராவூரணி சலாம், ஏ.எம்.ஹாரிஸ் ஆகிய மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் கூறியதாவது.
தமிழக கவர்னர் திரு.ரவி அவர்கள் தனது பொறுப்பை மறந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஏற்கனவே அவர் நாகாலாந்தில் பணியாற்றிய போது, அங்கு மக்களும், மக்கள் இயக்கங்களும் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தின.
இவர் தமிழக மக்களுக்கு எதிரான மனப்போக்கை கொண்டிருக்கிறார். எனவே ஒன்றிய அரசு இவரை திரும்பப்பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை குறித்து தமிழக அரசு நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு அமைத்தது இதுவரை அக்குழு எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில் இக்கோரிக்கைக்கு நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அண்ணா பிறந்த நாள் முன்பாக செப்டம்பர்10 அன்று. ஜனநாயக சக்திகளுடன் மக்களை திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிட போகிறோம்.
இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் அங்குள்ள மக்களுக்கு உதவ தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். ஆனால் இலங்கை அரசிடம் ஒப்படைப்பதில் மாற்று கருத்துகள் இருக்கிறது.
அங்கு செய்யும் உதவிகளை ஒரு குழு அமைத்து செஞ்சிலுவை சங்கங்கள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு மஜக சார்பில் கோரிக்கை வைக்கிறோம்..
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மயிலாடுதுறை ஆதீனம் விவகாரம், மத அரசியல் ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஒவ்வொரு மதத்தின் நம்பிக்கைகளும், மரபுகளும், அவர்களுடைய கலாச்சாரங்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்று கூறினார்.
இதில் மாவட்ட செயலாளர் முகம்மது ஜான், மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
08.05.22