புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
மே.09., புதுக்கோட்டை மேற்கு மாவட்ட மஜகவின் நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் முகம்மது ஜான் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் பங்கேற்று செப்டம்பர் 10, தலைமைச் செயலக முற்றுகை குறித்த விவாதங்களை தொடங்கி வைத்தார்.
கலந்துரையாடலின் போது பொதுச் செயலாளர் அவர்கள், மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் பஸ் மற்றும் வேன்களில் மக்களை திரட்ட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.
விரைவில் சுவர் விளம்பர மாதிரி வடிவங்கள் வழங்கப்படும் என்றும், அதன் படி விளம்பர பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
விரைவில் மாவட்ட பொதுக்குழு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் புதிய கிளை கட்டமைப்புகளை தொடங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான துரை முகம்மது அவர்கள் நன்றி கூற கூட்டம் உற்சாகத்துடன் நிறைவு பெற்றது.
இதில் மாநில துணைச் செயலாளர்கள் அப்துல் சலாம், கோட்டை.ஹாரிஸ் ஆகிய மாநில நிர்வாகிகள்.
மாவட்ட பொருளாளர் ரஹீம்தாலிஃப், மாவட்ட துணைச்செயலாளர் காதர் மைதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது மன்சூர் மாற்றும் மாவட்ட, கரம்பக்குடி, புதுக்கோட்டை ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
08.05.2022