ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுவிவசாயிகள் போராடி வருகிறார்கள். அதற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் மேலூரில் அனைத்து கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முபாரக் அலி, அவர்கள் தலைமையில் மஜக வினர் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் செந்தில், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் செய்யது மஸ்தான், மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர்கள் மஸ்தான் கனி, அசாருதீன், ஒன்றிய நிர்வாகிகள் ஜபருல்லா, கலீல் அஹமது, ஆசிக் அகமது, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். #Istandwithfarmers #MJKstandwithfarmers தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_புறநகர்_மாவட்டம் 27.09.2021
Month:
அந்தியூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக வினர் போராட்டம்!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்க ப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகரத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.k.ஷானவாஸ் அவர்கள் தலைமையில், தகவல் தொழிநுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது ஷபி, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, மற்றும் அப்பாஸ், நகர செயலாளர் மைதீன்பேக், நகர பொருளாளர் நிஜார் முகமது, நகர துணை செயலாளர்கள் பிலால், பர்க்கத் துல்லா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ஈரோடு_மேற்குமாவட்டம் 27.09.2021
கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கடலூரில் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூரில் நடைபெற்றது. ிதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் . கடலூர் மன்சூர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் அஜ்மீர் மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_மாவட்டம் 27.09.2021
சத்தியமங்கலத்தில் விசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜக துணை பொதுச்செயலாளர் சையது அகமது பாருக் பங்கேற்பு!
ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலமம் நகரத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் மஜக துணை பொதுச் செயலாளர் சையது அகமது பாரூக், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் பாபுலால், நகர செயலாளர் சலீம், உள்ளிட்ட திரளான மஜக நகர நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 27.09.2021
ஈரோட்டில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ிதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஷஃபீக் அலி, அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, பக்கீர் முகம்மது மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சபர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஃபயாஜ்தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷஃபி,அப்துல் காதர், சம்சுதீன், ரஹீம் மற்றும் நிர்வாகிகள், கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 27.09.2021