காவல்துறை கடலூர் மாவட்ட கண்காணிப்பாளருடன் கடலூர் வடக்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். நிர்வாகிகளை மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் அறிமுகம் செய்து வைத்தார். இச்சந்திப்பில், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர், பொருளாளர் ரியாஸ் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் அஜ்மீர் கான், சலீம், கம்மாபுரம் ஒன்றிய துணைச் செயலாளர் ஆதம் சேட், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_வடக்கு_மாவட்டம்.
Month:
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மனைகள் வழங்ககோரிய முற்றுகை போராட்டம்..! மஜகவினருடன் கோட்டாட்சியர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் தீர்வு!!
மனிதநேய ஜனநாயக கட்சியின், சிவகங்கை மாவட்டம் சார்பாக இன்று (07.09.2021) நடைபெறுவதாக இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கைவிடப்பட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பேரூராட்சி பகுதியிலும், ஊராட்சி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊராட்சி பகுதியிலும் இடங்கள் கண்டறிந்து இலவச மனைகள் வழங்கிட வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளியின் பெற்றோர் வழி சொத்து கிடைக்கிறதோ, இல்லையோ. மாற்றுத்திறனாளி என்ற ஒற்றை காரணத்திற்காக இதையே தகுதியாக ஏற்று மனு செய்த, அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச மனைகள் வழங்க வேண்டும், பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள முறைகேடுகளை களையவும் அவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் அவர்களின் வீடுகளுக்கு சென்று சரியான முறையில் ஆய்வு நடத்திட வேண்டும். உள்ளிட்ட மேற்கண்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் சிவகங்கை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், நேற்று (06-09-2021) மாலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அச்சன்புதூர் பேரூராட்சியில் பழுதடைந்த சுகாதாரத்துறை அலுவலகத்தை சீரமைத்துதர வலியுறுத்தி! தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் அச்சன்புதூர் பீர்மைதின், தலைமையில் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்களை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அச்சன் புதூர் பேரூராட்சியில் சுகாதாரத்துறை அலுவலகம் பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது இங்கு பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்கின்றனர் ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த அலுவலகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வாவை. இனாயத்துல்லா, அச்சன் புதூர் அஜிஸ், வடகரை செயலாளர் அலி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 06.09.2021
நெல்லையில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..! மாவட்ட ஆட்சியரிடம் நெல்லை மாவட்ட மஜகவினர் மனு..!
நெல்லை.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் நிஜாமுதீன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. விஷ்ணு அவர்களை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது... நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், நெல்லை மாநகரத்தில் தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மவுண்ட் ரோடு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும், மேலும் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக பணிக்கு தேவையான கட்டுமானப் பொருட்களுக்கு தேவைப்படும் பாறைகள், மலைகளை உடைத்து எடுப்பதற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அனுமதித்ததை விட அதிகளவில் கல் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக அதிகளவிலான பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கல் குவாரிகளில்
மஜக நெல்லை மாவட்டம் பத்தமடை கிளை சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம்..!
நெல்லை.செப்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம், அம்பை சட்டமன்ற தொகுதி, சேரை ஒன்றியத்தில் உள்ள பத்தமடை பேரூர் கிளை மற்றும் நாகர்கோயில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி திரவியம் எலும்பு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் பத்தமடை பொட்டலில் இன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்டப் பொருளாளர் பத்தமடை கனி தலைமை தாங்கினார், மாவட்ட அணி நிர்வாகிகள் N.அப்பாஸ், S.S.U.மைதீன், டில்லி சம்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர்கிளை செயலாளர் S.M.பீர் முஹம்மது அனைவரையும் வரவேற்றார். முகாமை மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக அப்பல்லோ A.S.M.காதர், இந்திய தேசிய காங்கிரஸ் S.K.பக்கீர்மைதீன், மதிமுக M.M.செய்யது அப்துல் கனி, CPI (M) T.J.பக்கீர்மைதீன், IUML K.S.கான்சா, Almas reals & fuels M.A.முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்துரை வழங்கினர். P.M.கோதர் மைதீன், புல்லட் கனி, சாதிக், T.N.மலுக்காமலி, ஆசி மைதீன், செட்டி மைதீன் உள்ளிட்டோர் முகாமிற்கான