மஜக நெல்லை மாவட்டம் பத்தமடை கிளை சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம்..!

நெல்லை.செப்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம், அம்பை சட்டமன்ற தொகுதி, சேரை ஒன்றியத்தில் உள்ள பத்தமடை பேரூர் கிளை மற்றும் நாகர்கோயில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி திரவியம் எலும்பு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் பத்தமடை பொட்டலில் இன்று நடைபெற்றது.

இம்முகாமிற்கு மாவட்டப் பொருளாளர் பத்தமடை கனி தலைமை தாங்கினார், மாவட்ட அணி நிர்வாகிகள் N.அப்பாஸ், S.S.U.மைதீன், டில்லி சம்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர்கிளை செயலாளர் S.M.பீர் முஹம்மது அனைவரையும் வரவேற்றார்.

முகாமை மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக அப்பல்லோ A.S.M.காதர், இந்திய தேசிய காங்கிரஸ் S.K.பக்கீர்மைதீன், மதிமுக M.M.செய்யது அப்துல் கனி, CPI (M) T.J.பக்கீர்மைதீன், IUML K.S.கான்சா, Almas reals & fuels M.A.முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்துரை வழங்கினர்.

P.M.கோதர் மைதீன், புல்லட் கனி, சாதிக், T.N.மலுக்காமலி, ஆசி மைதீன், செட்டி மைதீன் உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இம்மாபெரும் மருத்துவ முகாமில் கண் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டது.

கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொடுக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இம்முகாமில் பத்தமடையை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். ஊர் பொதுமக்கள் முகாமை ஏற்பாடு செய்தமைக்காக மஜக-வினருக்கு நன்றி தெரிவித்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
05-09-2021