மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்டம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் ராஜா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகாமை விஸ்வ பிரம்மா சமூக தலைவர் மூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சம்சுதீன், பொருளாளர் ஜாபர் சித்திக், துணை செயலாளர்கள் பஷீர், அப்துல் வகாப், கிளை செயலாளர் அபூபக்கர், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 29.08.2021
Month:
CPI நடத்திய மக்கள் நாடாளுமன்றம் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 23 முதல் 27வரை " #மக்கள்_நாடாளுமன்றம்" என்ற நிகழ்ச்சியை தமிழகம் தோறும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக #திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கடை வீதியில் (26-8-2021) இன்று காலை நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்திருக்கும் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார். இதில் திருத்துறைப்பூண்டி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் அவர்களும், சிபிஐயின் தொழிற்சங்க தலைவர் வஹிதா நிஜாம் அவர்களும், சிபிஐயின் ஒன்றிய செயலாளர் முருகையன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு மட்ட நிர்வாகிகளும் மற்றும் மஜக, திமுக, காங்கிரஸ், CPIM கட்சிகளின் நிர்வாகிகளும், சமூக ஆர்வலகளும், வணிகர்களும், விவசாய தோழர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக ஒன்றிய அரசு கொண்டு வந்த மக்களவையிலும் மாநிலங்களவையிலும் போதிய ஆதரவில்லாமல் நிறைவேற்றிய மூன்று வேளாண் வணிக சட்டங்களையும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தது ஏற்க்கதக்கது அல்ல என விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டு என்றும், கடந்த 2020 ஏப்ரல்17-ஆம்
தமிழக முதல்வருடன் FSO மாணவ கூட்டமைபினர் சந்திப்பு..! மாணவர் இந்தியா சார்பாக மாநில பொருளாளர் பஷீர் அஹமது பங்கேற்பு..!
தலைமை செயலகத்தில் மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் சி.வி.பி.எம்.எழிலரசு MLA., தலைமையில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் மாணவர் இந்தியா சார்பாக மாநில பொருளாளர் பஷீர் அஹமது அவர்கள் கலந்துக்கொண்டு கூட்டமைப்பின் சார்பாக தமிழகத்திற்கு தனி கல்விக்கொள்கைக்கு 27% சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாணவர் நல திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும், மாணவர் அமைப்பின் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தித்தனர். இச்சந்திப்பில் திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் எம்.கே.மோகன், கவி கணேசன் மற்றும் பிரின்ஸ் என்னரசு, தமீம் அன்சாரி, அமீர் மற்றும் பல்வேறு மாணவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மாணவர்_இந்தியா #ஊடக_பிரிவு 24.08.2021
ஈரோட்டில் மறைந்த மஜக நிர்வாகி இல்லத்திற்குமாநில நிர்வாகிகள் வருகை!
மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றிய சகோ. முகமது அலி, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இன்று அவரது இல்லத்திற்கு மாநிலத் துணைச் செயலாளர் பாபு சாகின்ஷா, மாணவர் இந்தியா அமைப்பின் மாநிலத் தலைவர் ஜாவித் ஜாபர், மாநிலச் செயலாளர் பெரியார் கார்த்தி, ஆகியோர் வருகை தந்து குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஷஃபீக் அலி, மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் முகமது, மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் யாசர், ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 25.08.2021