தலைமை செயலகத்தில் மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் சி.வி.பி.எம்.எழிலரசு MLA., தலைமையில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் மாணவர் இந்தியா சார்பாக மாநில பொருளாளர் பஷீர் அஹமது அவர்கள் கலந்துக்கொண்டு கூட்டமைப்பின் சார்பாக தமிழகத்திற்கு தனி கல்விக்கொள்கைக்கு 27% சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாணவர் நல திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும், மாணவர் அமைப்பின் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தித்தனர்.
இச்சந்திப்பில் திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் எம்.கே.மோகன், கவி கணேசன் மற்றும் பிரின்ஸ் என்னரசு, தமீம் அன்சாரி, அமீர் மற்றும் பல்வேறு மாணவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
தகவல்;
#மாணவர்_இந்தியா
#ஊடக_பிரிவு
24.08.2021