CPI நடத்திய மக்கள் நாடாளுமன்றம் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 23 முதல் 27வரை ” #மக்கள்_நாடாளுமன்றம்” என்ற நிகழ்ச்சியை தமிழகம் தோறும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக #திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கடை வீதியில் (26-8-2021) இன்று காலை நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்திருக்கும் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பேசினார்.

இதில் திருத்துறைப்பூண்டி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் அவர்களும், சிபிஐயின் தொழிற்சங்க தலைவர் வஹிதா நிஜாம் அவர்களும், சிபிஐயின் ஒன்றிய செயலாளர் முருகையன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு மட்ட நிர்வாகிகளும் மற்றும் மஜக, திமுக, காங்கிரஸ், CPIM கட்சிகளின் நிர்வாகிகளும், சமூக ஆர்வலகளும், வணிகர்களும், விவசாய தோழர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இறுதியாக ஒன்றிய அரசு கொண்டு வந்த மக்களவையிலும் மாநிலங்களவையிலும் போதிய ஆதரவில்லாமல் நிறைவேற்றிய மூன்று வேளாண் வணிக சட்டங்களையும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தது ஏற்க்கதக்கது அல்ல என விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டு என்றும்,

கடந்த 2020 ஏப்ரல்17-ஆம் தேதி ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள “மின்சார சட்ட திருத்த” மசோதாவையும் திரும்ப பெறவேண்டும் என்றும் மக்கள் நாடாளுமன்ற அவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
26.08.21