மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் மனித உரிமை அணி மாவட்ட செயலாளராக N.மகேந்திரன் த/பெ நடராஜன் நெ.5/26A பையப்பனூர் மேட்டுப்பாளையம் அலைபேசி:9655881433 இளைஞரணி மாவட்ட செயலாளராக M.ஆரிப் அப்பாஸ் த/பெ முபாரக் நெ.3/698 எம்.ஜி.ஆர் நகர் கரட்டுமேடு சிறுமுகை ரோடு மேட்டுப்பாளையம் அலைபேசி:7904589772 இளைஞரணி மாவட்ட துணை செயலாளராக I.முஹம்மது அசாருதீன் த/பெ இலியாஸ் நெ.2/578 ராயல் ஹவுசிங் குறும்பனூர் ரோடு மேட்டுப்பாளையம் ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள் மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவன், மு.தமிமுன் அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11.04.2021
Month:
ரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு..! தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..!
சென்னை.ஏப்.10., தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ரமலான் மாதத்தில் வருடா வருடம் தமிழக அரசு சார்பாக அரிசி வழங்கப்படும். ஆனால் இவ்வருடத்திற்கான அரிசி வழங்குதல் குறித்தான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை, இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அரசு முதன்மைச் செயலாளர் திரு.செந்தில்குமார் IAS., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ் ஆகியோர் சந்தித்து பள்ளிவாசல்களுக்கு விரைந்து அரிசியை அனுப்புமாறு மனு அளித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்திய_சென்னை 10.04.2021
கொரோன இரண்டாவது அலையில் எச்சரிக்கை தேவை… தோப்புத்துறை புதிய மஸ்ஜித் திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
வேதை.ஏப்-09.,நாகை மாவட்டம், தோப்புத்துறையில் #மஸ்ஜித்_ஆரிபின் என்ற பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று வாழ்த்துரை யாற்றினார். அப்போது இப்பள்ளியின் வரலாற்று பின்னணிகளை எடுத்துக் கூறியதோடு, சமூக நல்லிணக்கம் இப்பகுதியில் சிறப்பாக இருப்பதை சிலாகித்து பேசினார். மேலும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதை சுட்டிக்காட்டி இதில் எச்சரிக்கை தேவை என்றார். மார்க்க அறிஞர்களின் பத்வாவின்படி, அரசின் வழிகாட்டலை கவனமுடன் பின்பற்ற வேண்டும் என்றும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நமது உயிரையும், மற்றவர் உயிரையும் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொரோன தொற்றிலிருந்து இவ்வுலகம் பாதுகாக்கப்பட இறைவனிடம் பிரார்த்திப்போம் என்றும் கூறினார். இந்நிகழ்வில் தோப்புத்துறை முழுக்க கட்டமைக்கப்பட்டுள்ள 80 கண்காணிப்பு( CCTV) கேமராக்களின் செயல்பாடு தொடங்கி வைக்கப்ட்டது. இது சமுக சேவகர் ஆரிபா அவர்களின் ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளில் ஜமாத் நிர்வாகிகள், மார்க்க அறிஞர்கள், சான்றோர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலாளர்கள் , பல மதங்களை சேர்ந்த பிரமுகர்கள் என சகலரும் ஒன்று கூடி பங்கேற்றனர். நேற்றைய இரவு நிகழ்வில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 09.04.21
வழிபாட்டுதலம் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்!! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!
கோவை:ஏப்.09., இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு, தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுபாடுகளை அறிவித்துள்ளது, அதன்படி மத வழிப்பாட்டு கூடங்கள் இரவு எட்டு மணிவரை மட்டும் அனுமதிக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ரமலான் மாதம் நெருங்கும் இந்த நேரத்தில் மத வழிபாட்டு கூடங்களை இரவு பத்து மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். முன்னதாக இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் மஜக சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், IKP மாவட்ட செயலாளர் ஹனீபா, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கோவை_மாநகர்_மாவட்டம் 09.04.2021
வழிபாட்டு தளம் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்!! தலைமை செயலாளரிடம் மஜக துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா மனு!
இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு, தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுபாடுகளை அறிவித்துள்ளது, அதன்படி மத வழிப்பாட்டு கூடங்கள் இரவு எட்டு மணிவரை மட்டும் அனுமதிக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ரமலான் மாதம் நெருங்கும் இந்த நேரத்தில் மத வழிபாட்டு கூடங்களை இரவு பத்து மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வழியுறுத்தி இன்று தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தலைமை செயலாளரின் அறிவுறுத்தலின் பெயரில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் பொது துறை செயலர் உயர்திரு.செந்தில் குமார் இஆ.ப அவர்களை மஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் என்.ஏ. தைமிய்யா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறும் அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து நல்ல பதில் தருவதாக திரு.செந்தில் குமார் இ.ஆ.ப உறுதி அளித்தார். உடன் மஜக மாநில துணைச்செயலாளர் திருமங்கலம் ஷமீம் அகமது உடன் இருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தலைமையகம். 08.04.2021