வழிபாட்டு தளம் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்!! தலைமை செயலாளரிடம் மஜக துணைப் பொதுச்செயலாளர் தைமிய்யா மனு!

இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு, தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுபாடுகளை அறிவித்துள்ளது, அதன்படி மத வழிப்பாட்டு கூடங்கள் இரவு எட்டு மணிவரை மட்டும் அனுமதிக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

புனித ரமலான் மாதம் நெருங்கும் இந்த நேரத்தில் மத வழிபாட்டு கூடங்களை இரவு பத்து மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வழியுறுத்தி இன்று தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தலைமை செயலாளரின் அறிவுறுத்தலின் பெயரில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் பொது துறை செயலர் உயர்திரு.செந்தில் குமார் இஆ.ப அவர்களை மஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் என்.ஏ. தைமிய்யா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறும் அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து நல்ல பதில் தருவதாக திரு.செந்தில் குமார் இ.ஆ.ப உறுதி அளித்தார்.

உடன் மஜக மாநில துணைச்செயலாளர் திருமங்கலம் ஷமீம் அகமது உடன் இருந்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.
08.04.2021