You are here

வழிபாட்டுதலம் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்!! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு!


கோவை:ஏப்.09.,

இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு, தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுபாடுகளை அறிவித்துள்ளது, அதன்படி மத வழிப்பாட்டு கூடங்கள் இரவு எட்டு மணிவரை மட்டும் அனுமதிக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

புனித ரமலான் மாதம் நெருங்கும் இந்த நேரத்தில் மத வழிபாட்டு கூடங்களை இரவு பத்து மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.

முன்னதாக இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் மஜக சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான், IKP மாவட்ட செயலாளர் ஹனீபா, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
09.04.2021

Top