வேதை.ஏப்-09.,நாகை மாவட்டம், தோப்புத்துறையில் #மஸ்ஜித்_ஆரிபின் என்ற பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டது.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று வாழ்த்துரை யாற்றினார்.
அப்போது இப்பள்ளியின் வரலாற்று பின்னணிகளை எடுத்துக் கூறியதோடு, சமூக நல்லிணக்கம் இப்பகுதியில் சிறப்பாக இருப்பதை சிலாகித்து பேசினார்.
மேலும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதை சுட்டிக்காட்டி இதில் எச்சரிக்கை தேவை என்றார்.
மார்க்க அறிஞர்களின் பத்வாவின்படி, அரசின் வழிகாட்டலை கவனமுடன் பின்பற்ற வேண்டும் என்றும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நமது உயிரையும், மற்றவர் உயிரையும் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கொரோன தொற்றிலிருந்து இவ்வுலகம் பாதுகாக்கப்பட இறைவனிடம் பிரார்த்திப்போம் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் தோப்புத்துறை முழுக்க கட்டமைக்கப்பட்டுள்ள 80 கண்காணிப்பு( CCTV) கேமராக்களின் செயல்பாடு தொடங்கி வைக்கப்ட்டது. இது சமுக சேவகர் ஆரிபா அவர்களின் ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுகளில் ஜமாத் நிர்வாகிகள், மார்க்க அறிஞர்கள், சான்றோர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலாளர்கள் , பல மதங்களை சேர்ந்த பிரமுகர்கள் என சகலரும் ஒன்று கூடி பங்கேற்றனர்.
நேற்றைய இரவு நிகழ்வில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
09.04.21