மார்ச்.31., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பழனி நாடார், அவர்கள் போட்டியிடுகிறார். அதைத்தொடர்ந்து தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி நகர பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பீர்மைதின், அவர்கள் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளரும் கழகப் பேச்சாளருமான வாவை இனாயத்துல்லாஹ் மாவட்டத் துணைச் செயலாளர் ஆதம்பின் ஹனிபா ஆகியோர் கலந்து கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து உரையாற்றினார். இதில் திரளான மஜக வினர் பங்கேற்றனர். தகவல்: #மஜக_தேர்தல்_பணிக்குழு #தென்காசி_சட்டமன்ற_தொகுதி #MJKITWING #MJK2021 #TNElection2021 30.03.2021
Month:
ஜெயலலிதா அம்மையார் பாராட்டு பெற்ற ஒரே MLA தான் TRBராஜா! பொதக்குடியில் மு தமிமுன் அன்சாரி MLA பரப்புரை!
மார்ச்.31, மன்னார்குடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் TRB ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று பரப்புரை மேற்கொண்டார். மஜகவின் கோட்டைகளில் ஒன்றான பொதக்குடியில் பிரமாண்ட இரு சக்கர வாகன பரப்புரை நடைப்பெற்றது. 200-க்கும் அதிகமான மோட்டார் பைக்குகளில் கொடிகளுடன் மஜகவினர் திரண்டு வந்தனர். அங்கு பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் நானும், ராஜாவும் நெருங்கிய நண்பர்களாக அரசியலை தாண்டி பழகி வந்தோம் என்றார். ஒரு நாள் சபையில் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் இருந்த போது, அப்போது TRB. ராஜா அவர்கள் 'மேம்' என்று அவரை மரியாதையுடன் பேசினார். உடனே அவர் எழுத்து 'மை டியர் யங் MLA' என்று அன்புடன் குறிப்பிட்டு பேசினார். இது ஒரு அபூர்வ நிகழ்வு. இப்படி முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களால் பாராட்டுப் பெற்ற ஒரே எதிர்கட்சி திமுக MLA இவர் மட்டும் தான் என்று பலத்த கரவொலிக்கு இடையே பரப்புரை செய்தார். அவருக்கு உதய சூரியனில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதில் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நாகை முபாரக், மாவட்ட
திருவாரூர் தொகுதியில் பத்து கிலோமீட்டருக்கு மஜக வாகன பேரணி …. பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பரப்புரை..!
மார்ச்.31, இன்று திருவாரூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக உதயசூரியனில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக அத்திக்கடை தொடங்கி கூத்தாநல்லூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும், ஏராளமான இதர வாகனங்களிலும் மஜகவினர் கொடிகளுடன் ஆர்ப்பரித்து பொதுச் செயலாளரை பரப்புரைக்கு அழைத்து சென்றனர். அத்திக்கடை, கூத்தாநல்லூர் பகுதிகளில் நுழைந்த போது மஜக வாழ்க என்ற முழக்கங்கள் அதிர்ந்தது. பெண்கள் வெளியே வந்து கையசைத்து வரவேற்பளித்தனர். மஜக வின் தியாகப்பூர்வ முடிவை ஆதரித்து பொதுமக்கள் பொதுச் செயலாளருக்கு சால்வை அணித்து , கைக் கொடுத்து வாழ்த்து கூறினர். கூத்தாநல்லூரில், சிறந்த தொரு தலைவர் என சமூக ஆர்வலர்கள், சான்றோர்கள், ஜமாத்தினர் கைக் கொடுத்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வழியெங்கும் பல இடங்களில் ஜீப்பில் நின்றவாரே திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசினார். மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நாகை முபாரக் தொடர் பரப்புரை மேற்கொண்டு வந்தார். டெல்டா வின் மஜக கோட்டைகளில் ஒன்றான இங்கு வாகன பேரணியை மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக்,
பெரம்பலூர் மாவட்ட உலமாசபை ஒருங்கிணைத்த கூட்டத்தில் மஜக பங்கேற்பு!
மார்ச்.31, பெரம்பலூரில், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை ஒருங்கிணைத்த திமுக ஆதரவு கட்சிகளின் மற்றும் ஜமாத் தார்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் மா. பிரபாகரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யவது குறித்து கலந்தாலோனை செய்யப்பட்டது. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மஜக மாவட்ட துணைச் செயலாளர் உதயசூரியன் மஜகவின் சார்பில் பங்கேற்று ஒருமனதாக வாக்களித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிப்பெற செய்ய வேண்டிய அவசியம் குறித்து கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜஹாங்கிர் பாஷா, அப்துல் ரஹ்மான், மாவட்ட அணி மற்றும் ஒன்றிய, நகர மஜக நிர்வாகிகள் திரளான கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #பெரம்பலூர்_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021 30.03.2021
முன்மாதிரி அரசியல் தியாகம்.! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLAவுக்கு திருச்சி உலமாக்கள் மற்றும் ஜமாத் பாராட்டு.!
திருச்சி.மார்ச்,31., நேற்று திருச்சி வந்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சார்பில் பாராட்டும், வரவேற்பும் அளிக்கப்பட்டது. உழவர் சந்தை அருகில் உள்ள ஜெனரல் பஜார் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜமாத்துல் உலமா மாவட்ட தலைவர் இனாமுல் உசேன் ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று பேசினார். மக்கள் நன்மைக்காக பதவிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் கொள்கை அடிப்படையில் மஜக முடிவெடுத்தது ஒரு முன்மாதிரி அரசியல் தியாகம் என்றும், நடப்பு MLA பதவியையும் இழந்தது சாதாரண விசியமல்ல என்றும் அவர் பாராட்டினார். சலாம் ஹஜ்ரத் பேசும் போது, உலமாக்கள் மற்றும் தமிழக மக்களுக்காக அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளை நினைவு கூறினார். பின்னர் அப்பள்ளி ஜமாத் சார்பில் பாராட்டு தெரிவித்து சால்வை அணிந்தனர். அதை தொடர்ந்து காதர் மஸ்ஜிதில் அப்பள்ளி ஜமாத் சார்பில் பாராட்டு, வரவேற்பும் அளிக்கப்பட்டது அங்கு மதிய (லுஹர்) தொழுகைக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வில் பொதுச்செயலாளர் அவர்கள் ஏற்புரையாற்றினார். மஜகவின் முடிவு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாகவும் ஜமாத் நிர்வாகிகள் மனம் திறந்து பாராட்டினார். இந்நிகழ்வில் மாநிலச்செயலாளர்