பிப்.15, குடந்தையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி எதிர்வரும் பிப்.20 அன்று மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைப்பெற உள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு கோரி அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைப்பு குழு தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் மஜகவினர் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் புகழ்மிக்க திருப்பனந்தாள் காசிமட அதிபர் ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் அவர்களை போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக சந்தித்து பிப்.20 நடைப்பெறும் போராட்டத்திற்கு துண்டறிக்கையை கையளித்து ஆதரவும், பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர். இதில் பாமக சார்பில் ம.க.ஸ்டாலின், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் ராசுதீன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், பாமக மாவட்ட துணைச்செயலாளர் ரவி கலியப்பெருமாள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி விமல், வி.த.பு கட்சி பொது செயலாளர் தளபதி சுரேஷ், மஜக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஹசன், நாம்தமிழர் கட்சி குடந்தை தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மாவட்ட தலைவர் உள்ளிட்ட போராட்டகுழுவினர் சென்றிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
Month:
பெட்ரோல் டீசல் எரிவாயு விலையேற்றம்… மக்கள் மீதான யுத்தம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!
கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இன்று டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் வரையிலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 92 ரூபாய் வரையிலும் உச்சத்தை தொட்டிருக்கிறது. எரிவாயு விலை இன்று மேலும் 50 ரூபாய் ஏற்றப்பட்டிருக்கிறது. இது மக்கள் மீது மத்திய அரசு நடத்தும் யுத்தம் என்று குற்றம் சாட்டுகிறோம். மோசமான இந்த விலையேற்றம் என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி, பெரு முதலாளிகள் சிலரை மேலும் வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நமது அண்டை நாடுகளான இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 62 ரூபாயும், பங்ளாதேஷில் 78 ரூபாயும் விற்கப்படும் நிலையில் நம் நாட்டில் அநியாய கொள்ளை நடக்கிறது. நம் நாட்டில் இறக்குமதிக்கு பின்னர் சுத்திகரிக்கப்பட்டு, பிறகு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 33 ரூபாயாக இருக்கும் போது, உள்நாட்டில் வாழும் மக்கள் மீது அநியாய வரிகளை சுமத்தி ஆதாயம் பார்க்கலாமா? என்ற கேள்வி எழுகிறது. இதை மத்திய அரசு உணர்ந்து விலையேற்றத்தை கட்டுப்படுத்தி, வரிகளை குறைத்திட வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 15.02.2021
மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மஜகவில் இணைந்த மாற்றுகட்சியினர்..!
சென்னை.பிப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாற்றுக் கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களை இணைத்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த தாம்பரம் ஷாஜஹான், முஸ்தபா மற்றும் சேக்தாவூத் ஆகியோர் தலைமையில் பலர் இன்று மஜக தலைமையகத்தில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். மேலும் புதிதாக இணைந்தவர்கள் மத்தியில் பேசிய பொருளாளர் அவர்கள், கட்சி பணிகளில் தீவிரமாக களப்பணியாற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நிகழ்வின் போது பொருளாளர் உடன் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜிந்தா மதார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் அல்தாப், பொருளாளர் ஆலந்தூர் சலீம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், ECR சமது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு_மாவட்டம் 14-02-2021
திட்டச்சேரியில் மாணவர் இந்தியா நடத்திய விளையாட்டு போட்டிகள்.! பரிசுகள் வழங்கி மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு…!
பிப்.14., கொரோனா தொற்றுக்கு பிறகு மாணவ, மாணவிகளிடம் விளையாட்டு ஆர்வங்கள் குறைந்து ஸ்மார்ட் போனில் அவர்களது பொழுதுகள் வீணடிக்கப்படுவது பரவலாக கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் "மாணவர் இந்தியா" சார்பில் நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ஒரு நாள் விளையாட்டு போட்டிகள் இன்று நடத்தப்பட்டது. 100 மீட்டர் ஒட்டப்பந்தயம், கால்பந்தாட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், பலூன் உடைத்தல், குடுவையில் விரைந்து தண்ணீர் நிரப்புதல், லெமன் வித் ஸ்பூன், இசை நாற்காலி என 7 வகையான போட்டிகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 323 சிறுவர், சிறுமியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். பெற்றோர்கள், பார்வையாளர்கள் என திரளானோர் கூடி ஆட்டங்களை ரசித்து உற்சாகப்படுத்தினர். இறுதியில் போட்டியில் வென்றவர்களுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதுபோல் சிறப்பு விருந்தினர்களும் பரிசுகளை வழங்கினர். அடையாள அட்டைகள் வழங்கி போட்டிகள் நேர்த்தியாக வழிநடத்தப்பட்டது. போட்டி நடைபெற்ற நடுத்தெருவில் மாணவர்கள் மாணவர் இந்தியா கொடிகளுடன் ஆராவாரத்தில் ஈடுபட்ட படியே குதூகலித்தனர். போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதால் இரவு 7 மணியை தாண்டியும் குளிரில் நீண்ட வரிசையில் நின்று
கட்டிமேடு ஜபருல்லா இல்ல மணவிழா! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA வாழ்த்து!!
பிப்.14, கட்டிமேடு ஜபருல்லா அவர்களின் மகன் யூசுப் சலீம் அவர்களுக்கும், துளசேந்திரபுரம் -தைக்கால் சேக் அலாவுதீன் அவர்களின் மகள் வஷிபா அவர்களுக்கும் இன்று கட்டிமேட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று மணமக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆடலரசன் அவர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வுக்கு பிறகு பாமணியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மஜக கிளையின் நிர்வாகிகள் பொதுச்செயலாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் செய்யது மீரான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கட்டிமேடு ஆசிப், ஒன்றிய செயலாளர் அலீம், கிளை நிர்வாகிகள் யாசிர்,மாலிக், இமாம் அலி உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.