கட்டிமேடு ஜபருல்லா இல்ல மணவிழா! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA வாழ்த்து!!


பிப்.14,
கட்டிமேடு ஜபருல்லா அவர்களின் மகன் யூசுப் சலீம் அவர்களுக்கும், துளசேந்திரபுரம் -தைக்கால் சேக் அலாவுதீன் அவர்களின் மகள் வஷிபா அவர்களுக்கும் இன்று கட்டிமேட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்று மணமக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆடலரசன் அவர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்வுக்கு பிறகு பாமணியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மஜக கிளையின் நிர்வாகிகள் பொதுச்செயலாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் செய்யது மீரான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கட்டிமேடு ஆசிப், ஒன்றிய செயலாளர் அலீம், கிளை நிர்வாகிகள் யாசிர்,மாலிக், இமாம் அலி உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல் :

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.