நெல்லை ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மஜக சார்பாக இலவச கண்சிகிச்சை முகாம்..!


நெல்லை.பிப்.14.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நெல்லை ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில், ராதாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் A.R.ஹாஜா தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமை நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவங்கி வைத்தார்.

முகாமில் சோதனை செய்யபட்டு கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது, இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்விற்கான ஏற்பாட்டை ஆத்தங்கரை கிளை மஜக நிர்வாகிகள் செரிப், ரஹ்மத்துல்லா, முஜீப், சலீம், சதாம் உசேன், கிதிர் அலியா மற்றும் பேட்டை சம்சுதீன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
14-02-2021