திட்டச்சேரியில் மாணவர் இந்தியா நடத்திய விளையாட்டு போட்டிகள்.! பரிசுகள் வழங்கி மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு…!


பிப்.14.,

கொரோனா தொற்றுக்கு பிறகு மாணவ, மாணவிகளிடம் விளையாட்டு ஆர்வங்கள் குறைந்து ஸ்மார்ட் போனில் அவர்களது பொழுதுகள் வீணடிக்கப்படுவது பரவலாக கவலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் “மாணவர் இந்தியா” சார்பில் நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ஒரு நாள் விளையாட்டு போட்டிகள் இன்று நடத்தப்பட்டது.

100 மீட்டர் ஒட்டப்பந்தயம், கால்பந்தாட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், பலூன் உடைத்தல், குடுவையில் விரைந்து தண்ணீர் நிரப்புதல், லெமன் வித் ஸ்பூன், இசை நாற்காலி என 7 வகையான போட்டிகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இதில் 323 சிறுவர், சிறுமியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.

பெற்றோர்கள், பார்வையாளர்கள் என திரளானோர் கூடி ஆட்டங்களை ரசித்து உற்சாகப்படுத்தினர்.

இறுதியில் போட்டியில் வென்றவர்களுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அதுபோல் சிறப்பு விருந்தினர்களும் பரிசுகளை வழங்கினர்.

அடையாள அட்டைகள் வழங்கி போட்டிகள் நேர்த்தியாக வழிநடத்தப்பட்டது.

போட்டி நடைபெற்ற நடுத்தெருவில் மாணவர்கள் மாணவர் இந்தியா கொடிகளுடன் ஆராவாரத்தில் ஈடுபட்ட படியே குதூகலித்தனர்.

போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதால் இரவு 7 மணியை தாண்டியும் குளிரில் நீண்ட வரிசையில் நின்று அனைவரும் பெற்று சென்றனர்.

இந்நிகழ்வை மஜக மாவட்ட செயலாளர் ரியாஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

நாகை மாவட்ட மாணவர் இந்தியாவின் மாவட்ட துணை செயலாளர் அசார், திட்டச்சேரி நிர்வாகிகள் சமீர், சலாவுதீன், கலில், ஹபில், ரில்வான், பரிது, ஜாசிம், பாசித், ஹாசிம் மற்றும் மஜக நிர்வாகிகள் நிசார், ரிஜ்வான், இப்ராகிம், சுல்தான், தாரிக், அசார், சதாம், பாஸித், சாகுல் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தி தொகுப்பு;

#மாணவர்_இந்தியா
#நாகை_மாவட்டம்
14-02-2021