சென்னை.பிப் 5, இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேசினார். நிவர் மற்றும் புரவி புயலாலும் அடுத்தடுத்த தொடர் மழையாலும் எனது நாகை தொகுதி உட்பட டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கியிருக்கின்றன. எனவே விளைச்சலின் அடிப்படையில் இல்லாமல் பாதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோறுகிறார்கள். அவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று அவர் பேசினார். இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் அரசு இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #சட்டப்பேரவை_வளாகம் 05-02-2021
Month:
சட்டப்பேரவையில் 10 தலைப்புகளில் மக்கள் பிரச்சனைகளை எதிரொலித்தார் மு தமிமுன் அன்சாரி MLA.! துணை முதல்வர் மற்றும் 4 அமைச்சர்கள் குறுக்கிட்டு விவாதம்!
சென்னை.பிப்.5, இன்று சட்டப்பேரவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார். விவசாயிகளின் பிரச்சனை, இலங்கை படையால் மீனவர்கள் கொலை, பேரறிவாளன் விடுதலை, சிறைவாசிகள் விடுதலை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பன்னோக்கு மருத்துவமனை ஊழியர்கள் பணி நிரந்தரம், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சங்க கோரிக்கை, தொகுதி கோரிக்கைகள், சிறுபான்மையினர் கோரிக்கைகள், கலவரங்களை தூண்டுவோர் மீது நடவடிக்கை என பல விவகாரங்கள் தொடர்பாக பேசினார். அப்போது விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக அவர் பேசிய போது அமைச்சர்கள் o.s.மணியன், R.V.உதயகுமார், அன்பழகன் ஆகியோர் குறுக்கிட்டு விளக்கமளித்தனர். அப்போது அவர் பேசிய ஒரு சொற்றொடரை சுட்டிக்காட்டி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், தமிமுன் அன்சாரி பேசுவது "வஞ்சப்புகழ்ச்சி அணி போல" இருக்கிறது என பேசினார். உடனே துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து அதை திருத்திக் கொள்ளலாமே என்றதும், நான், உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டேன் என்றும் என் நோக்கம் அதுவல்ல என்றும் தமிமுன் அன்சாரி அவர்கள் கூறி, அந்த வாசகத்தை துணை முதல்வர் சுட்டிக் காட்டியது போல திருத்திக் கொள்ளலாம் என்று சபாநாயகரிடம் கூறினார். இம்முறையும் தமிழக
முதுநிலை பட்டதாரிகள் கோரிக்கை மனு.! நடவடிக்கை எடுப்பதாக மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA ஆறுதல்.!
சென்னை.பிப்.05., முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 2018 - 19 ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கிறார்கள். அவர்கள் சட்டமன்ற விடுதிக்கு வந்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை சந்தித்து இக்கோரிக்கையை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்தார். இப்படி பல தரப்பினரும் மக்கள் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேசுமாறும், அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லுமாறும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை சந்திக்கின்றனர். அவற்றை நிறைவேற்றிட மஜக சார்பில் அவர் முயற்சிகள் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #மத்தியசென்னை_மாவட்டம் 04-02-2021
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேரில் சந்தித்து கூறினர்!
பிப்.4., சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் MBBS, MD, BDS படிக்கும் மருத்துவ மாணவர்கள் அரசு கல்லூரிக்கான கட்டணத்தை வசூலிக்க கோரி தொடர் போராட்டம் நடத்தினர். இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் காணொளி வழியே பங்கேற்று ஆதரவு கொடுத்தார். இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். இன்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கு போராட்டக் குழு மாணவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தங்களது போராட்ட வெற்றியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #தலைமையகம் 04-02-2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! நெல்லை மாவட்ட, மனிதநேய கலை இலக்கிய பேரவை அணி செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட, மனிதநேய கலை இலக்கிய பேரவை அணி செயலாளராக P.M.முஹம்மது கனி த /பெ P.M.முகைதீன் 25,திப்புசுல்தான் தெரு பத்தமடை, திருநெல்வேலி 627453. அலைபேசி; 7826049128 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 04-02-2021