பிப்.4.,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் MBBS, MD, BDS படிக்கும் மருத்துவ மாணவர்கள் அரசு கல்லூரிக்கான கட்டணத்தை வசூலிக்க கோரி தொடர் போராட்டம் நடத்தினர்.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் காணொளி வழியே பங்கேற்று ஆதரவு கொடுத்தார்.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.
இன்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதற்கு போராட்டக் குழு மாணவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தங்களது போராட்ட வெற்றியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#தலைமையகம்
04-02-2021