உற்சாகம் பெரும் நாகை கடற்கரை…

image

ஆக.08., நேற்று (07.08.16) மாலை நாகை கடற்கரையில் சிறுவர் பூங்கா வளாகத்தில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ரோட்டரி கிளப் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதுநாள் வரை கலையரங்கம் பயன்படுத்தப்படாமல் இருந்தது அதை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரோட்டரி கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

அதனுடைய முன்னோட்ட தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன்அன்சாரி, இது போன்ற முயற்சிகளை முன்னெடுக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அப்போதுதான் திட்டங்களை விரைவாக தொடர முடியும் என கூறினார்.

மேலும், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஐந்து இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதை அறிவிப்பு செய்த உடன் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

இந்நிகழ்வில், பிரைம் ஆர்க்கிடெக் கல்லூரியின் தாளாளர் இராமதாஸ், EGSP கல்வி குழுமங்களின் செயலாளர் பரமேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் ஆர்.சந்திரமோகன், நகராட்சி ஆணையர் ஜான்சன் மற்றும் ரோட்டரி கிளப்பின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இனி நாகை கடற்கரையில் பொன் மாலை பொழுதுடன் கூடிய பொழுது போக்குகள் மக்களை மகிழ்விக்க போகிறது.

தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.