சட்டப்பேரவையில் 10 தலைப்புகளில் மக்கள் பிரச்சனைகளை எதிரொலித்தார் மு தமிமுன் அன்சாரி MLA.! துணை முதல்வர் மற்றும் 4 அமைச்சர்கள் குறுக்கிட்டு விவாதம்!


சென்னை.பிப்.5,

இன்று சட்டப்பேரவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார்.

விவசாயிகளின் பிரச்சனை, இலங்கை படையால் மீனவர்கள் கொலை, பேரறிவாளன் விடுதலை, சிறைவாசிகள் விடுதலை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரந்தரம், பன்னோக்கு மருத்துவமனை ஊழியர்கள் பணி நிரந்தரம், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சங்க கோரிக்கை, தொகுதி கோரிக்கைகள், சிறுபான்மையினர் கோரிக்கைகள், கலவரங்களை தூண்டுவோர் மீது நடவடிக்கை என பல விவகாரங்கள் தொடர்பாக பேசினார்.

அப்போது விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக அவர் பேசிய போது அமைச்சர்கள் o.s.மணியன், R.V.உதயகுமார், அன்பழகன் ஆகியோர் குறுக்கிட்டு விளக்கமளித்தனர்.

அப்போது அவர் பேசிய ஒரு சொற்றொடரை சுட்டிக்காட்டி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், தமிமுன் அன்சாரி பேசுவது “வஞ்சப்புகழ்ச்சி அணி போல” இருக்கிறது என பேசினார்.

உடனே துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து அதை திருத்திக் கொள்ளலாமே என்றதும், நான், உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டேன் என்றும் என் நோக்கம் அதுவல்ல என்றும் தமிமுன் அன்சாரி அவர்கள் கூறி, அந்த வாசகத்தை துணை முதல்வர் சுட்டிக் காட்டியது போல திருத்திக் கொள்ளலாம் என்று சபாநாயகரிடம் கூறினார்.

இம்முறையும் தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர் அவையில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#சட்டப்பேரவை_வளாகம்
05.02.2021