You are here

விவசாயிகளுக்கு முழுமையான இன்சூரன்ஸ் கிடைக்க வேண்டும்! சட்டமன்றத்தில் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை! (பகுதி 1)


சென்னை.பிப் 5,

இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேசினார்.

நிவர் மற்றும் புரவி புயலாலும் அடுத்தடுத்த தொடர் மழையாலும் எனது நாகை தொகுதி உட்பட டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கியிருக்கின்றன.

எனவே விளைச்சலின் அடிப்படையில் இல்லாமல் பாதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோறுகிறார்கள்.

அவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் அரசு இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#சட்டப்பேரவை_வளாகம்
05-02-2021

Top