கடந்த பிப்ரவரி 5 அன்று சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேசியதாவது.... ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கடலில் மீன் பிடிக்க சென்ற போது, இலங்கை கடற்படைபடையால் 4 மீனவர்கள் கொல்லப்பட்டனர். எதிரி நாடுகள் கூட நம் மீனவர்களை சுடுவதில்லை. இதுவரை 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை படை கொன்றிருக்கிறது. 4 மீனவர்கள் கொல்லப்பட்ட நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. அவர்களின் சேதமடைந்த படகிற்கும் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அவர் பேசிய பிறகு மீன்வளத் துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களையும் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #சட்டப்பேரவை_வளாகம் 06-02-2021
Month:
கோவை மாநகர காவல் ஆணையருடன் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் சந்திப்பு!
பிப்.06., கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இச்சந்திப்பில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து பேசிய பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியும், கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை பேசிய அந்த அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கரை, கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியும், கோரிக்கை வைத்தனர். மேலும் மஜக வின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் சிங்கை சுலைமான், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், உள்ளிட்ட
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மறியல்.! சென்னையில் மு தமிமுன் அன்சாரி MLA, PR பாண்டியன் உள்ளிட்டோர் கைது…!
சென்னை.பிப் 6, தலைநகர் டெல்லியில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் அமைதி போராட்டம் 74-வது நாளை எட்டியுள்ளது. அதையொட்டி நாடு தழுவிய அளவில் இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இன்று தமிழக காவிரி விவசாய சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தோழர் P.R.பாண்டியன் அவர்கள் நேற்று இரவு விடுத்த அழைப்புக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளித்தது. இன்று மதியம் 12.30க்கு தோழர் P.R. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற மறியவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார். குறுகிய கால ஏற்பாட்டில் விவசாய சங்கத்தினரும், மஜக விவசாய அணியினரும் ஆர்வமுடன் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மறியல் செய்து சாலையில் அமர்ந்தனர். போக்குவரத்தை முற்றிலும் முடக்காமல் ஒரு பகுதி சாலை அவசர தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டது. 20 நிமிட மறியலுக்கு பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுடன் இதில் மாநிலச் செயலாளர் சீனி முகம்மது , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்
நாகை தொகுதி கோரிக்கைகள்! சட்டமன்றத்தில் மு தமிமுன் அன்சாரி MLA எழுப்பினார்!
பி.06., (பாகம் 3) ஜனவரி 5 அன்று சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி MLA„ அவர்கள் நாகை தொகுதி சார்ந்த கோரிக்கைளை பேசினார். அடுத்தடுத்த புயல்கள், தொடர் மழை காரணமாக நாகை தொகுதி முழுக்க சாலைகள் பழுதடைந்து கிடக்கிறது. அதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். சாமந்தான்பேட்டை மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என போராடுகிறார்கள். மீன்பிடி இறங்குதளம் அல்லது அதற்கு இணையான மாற்று திட்டம் ஒன்றை அங்கு அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நாகை மற்றும் நாகூர் கடற்கரைகளை மேம்படுத்தி தர இதே அவையில் பலமுறை பேசியிருக்கிறேன் அவற்றை விரைந்து நிறைவேற்றி தர வேண்டுகிறேன். அதே போல திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்றும் இதே அவையில் வலியுறுத்திருக்கிறேன். அதையும் செயல்படுத்தி தருமாறும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல் #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் 05.02.2021
பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை!சட்டப்பேரவையில் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு பாகம் – 2
பிப் 5, இன்று சட்டப் பேரவையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசினார். இது குறித்து தமிழக அரசு தொடர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அது போல் ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை குறித்தும் பேசினார். அவர்கள் தங்கள் முன் விடுதலை குறித்து உயர்நீதி மன்றத்திற்கோ, உச்ச நீதி மன்றத்திற்கோ செல்லும் போது தமிழக அரசு அங்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKTWING #சட்டப்பேரவை_வளாகம் 05.02.2021