இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிய வேண்டும்! சட்டப்பேரவையில் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…! (பாகம் 5)


கடந்த பிப்ரவரி 5 அன்று சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேசியதாவது….

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கடலில் மீன் பிடிக்க சென்ற போது, இலங்கை கடற்படைபடையால் 4 மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

எதிரி நாடுகள் கூட நம் மீனவர்களை சுடுவதில்லை. இதுவரை 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை படை கொன்றிருக்கிறது.

4 மீனவர்கள் கொல்லப்பட்ட நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. அவர்களின் சேதமடைந்த படகிற்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக அரசு இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு இதை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் பேசிய பிறகு மீன்வளத் துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களையும் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#சட்டப்பேரவை_வளாகம்
06-02-2021