பிப்.17,
இந்தியர்களுக்கு மத்தியில் மதரீதியாகப் பாகுபாட்டை ஏற்படுத்தும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், NRC, NPR அமுல்படுத்த கூடாது என வலியுறுத்தி ஆக்கூரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கூட்டமைப்பு சார்பில் ஜமாத் நிர்வாக சபை தலைவர் A.முஹம்மது ஷிஹாபுதீன் தலைமையில் நடைபெற்றது.
இப்பேரணியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 600அடி நீள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் ஆக்கூர் முக்கூட்டிலிருந்து ஆக்கூர் பேருந்து நிலையம் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்தனர்.
தொடர்ந்து காந்தி வீதியில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மஜக கொள்கை விளக்க அணியின் மாநில துணை செயலாளர் A.காதர் பாட்சா கண்டன உரையாற்றினார்.
இதில், M.அப்துல் ரஹ்மான் Ex MP, வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, பேரா.ஜெயராமன், சிவகாசி முஸ்தபா, M.நிஜாம் முஹைதீன், நிவேதா M.முருகன், S.ராஜ்குமார் EX MLA, பா.ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் A.R.சந்திர மோகன் உள்ளிட்டவர்களும் குடியுரிமை சட்டங்களுக்கெதிரான தங்கள் கண்டனங்களை பதிவுச் செய்தனர்.
மேலும், மஜக மாவட்ட பொருளாளர் சங்கை தாஜ்தீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் ஹாஜா சலீம், செம்பை ஒன்றிய செயலாளர் நிஜாமுதீன், ஆக்கூர்-மடப்புரம் கிளை நிர்வாகிகள் முஹம்மது சஹின், முக்தார், சல்மான், முஹம்மது அசாருதீன், முஹம்மது ஜஸ்பர், ஜஸ்வத் அஸ்லம், அமீருல் அஸ்லம், நஸ்ருல் பய்ஸ், பர்ஹான், அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைவடக்குமாவட்டம்
16.02.2020