ஜன.01., பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் அகரம் கிராமத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மகத்தான மக்கள் சேவைகளால் ஈர்க்கப்பட்டு பல்வேறு சமூகங்களைச் சார்ந்த உறவுகள் தங்களை மஜகவில் பேரார்வத்துடன் இணைத்து கொண்டனர். ஊர் கோவில் வாசலில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டப்பொருளாளர் ராஜ்மோகன் தலைமை தாங்க, மாவட்ட செயலாளர் தாளம்பாடி முஜிப் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். வெறுப்பு அரசியலை வேரறுத்து நல்லிணக்க அரசியலை முன்னெடுக்கும் மஜகவின் பணிகளுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாக இது உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் T.S.தமிமுன் அன்சாரி, K அப்துல் ரஹ்மான், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசப் ராஜா, வழக்கறிஞர் ராகுல்காந்தி, அகரம் அறிவழகன், அகரம் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #பெரம்பலூர்_மாவட்டம் 31-12-2020
Month:
அத்திக்கடையில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலப் பள்ளி அருகில் நடைப்பெற்றது. இம்முகாமில் திரளானோர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். இதில் மஜக அத்திக்கடை - பாலாகுடி நிர்வாகிகள் அப்துல் காதர், சலீம், சாதிக், சாஹூல், சபீக், மஸ்தான், அஜ்லான், முகமது ரபீக், அஃப்சல், ரியாஸ், நிஜாம், சதாம், சாஹிது, பைசல், சாஹூல் ஹமீது உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
கும்பகோணம் மாதுளம்பேட்டையில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் குடந்தை மாதுளம்பேட்டையில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். மஜக நிர்வாகி ஹசேன் முஹம்மது நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை மேற்கொண்டார். இம்முகாமில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களை மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இதில், மாவட்ட துணைச் செயலாளர் இப்ராஹிம்ஷா மற்றும் நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
சங்கரன்பந்தலில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று பள்ளிவாசல் அருகில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திரளானோர் மஜக உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட செயலாளர் சங்கை தாஜூதீன் கட்சி துண்டு அணிவித்து, முதற்கட்ட மஜக அட்டைகளை கையளித்தார். இதில் சங்கரன்பந்தல் நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #மயிலாடுதுறை_மாவட்டம்.
குடந்தை ஒன்றியத்தில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, மனிதநேய ஜனநாயக கட்சியின் குடந்தை நகரம் மற்றும் ஒன்றியம் இணைந்து மேலக்காவேரியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. மேலக்காவேரி ஜாமியா மஸ்ஜித் அருகில் நடைப்பெற்ற இம்முகாமிற்கு கும்பகோணம் ஒன்றிய செயலாளர் இப்ராஹிம் மற்றும் குடந்தை நகர செயலாளர் ராஜ் முஹம்மது தலைமை வகித்தனர். இம்முகாமில் பங்கேற்று மஜக புதிய உறுப்பினராக பலர் தங்களை பதிவு செய்து கொண்டனர். இதில், மாவட்ட துணைச் செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகமது யாசின், மாவட்ட சுற்றுப்புற சூழல் அணி செயலாளர் ஜஹாங்கீர், நகர பொருளாளர் வஜிர்அலி நிர்வாகிகள் தஜ்மல், சாதிக் பாட்சா மற்றும் மஜக உறுப்பினர் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.