ஜன.01,
மனிதநேய ஜனநாயக கட்சியின் குடந்தை நகரம் மற்றும் ஒன்றியம் இணைந்து மேலக்காவேரியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.
மேலக்காவேரி ஜாமியா மஸ்ஜித் அருகில் நடைப்பெற்ற இம்முகாமிற்கு கும்பகோணம் ஒன்றிய செயலாளர் இப்ராஹிம் மற்றும் குடந்தை நகர செயலாளர் ராஜ் முஹம்மது தலைமை வகித்தனர்.
இம்முகாமில் பங்கேற்று மஜக புதிய உறுப்பினராக பலர் தங்களை பதிவு செய்து கொண்டனர்.
இதில், மாவட்ட துணைச் செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகமது யாசின், மாவட்ட சுற்றுப்புற சூழல் அணி செயலாளர் ஜஹாங்கீர், நகர பொருளாளர் வஜிர்அலி நிர்வாகிகள் தஜ்மல், சாதிக் பாட்சா மற்றும் மஜக உறுப்பினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.