கோவை கடைவீதி பகுதியில் மஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!


கோவை:ஜன.01.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 ஆவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் கோவை பெரிய கடை வீதி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் பொறுப்பு ஹாருண், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திரளானோர் பங்கேற்று ஆர்வத்துடன் தங்களை மஜக வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் நவ்ஃபல் பாபு, மாவட்ட துணைச் செயலாளர் ஜமேஷா, மற்றும் நடைபாதை வியாபாரிகள் பிரிவு கடை வீதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
01.01.2021