ஜனவரி:02., அமெரிக்காவில் வசிக்கும் தமிழக மக்கள் பல்வேறு பொது சேவை அமைப்புகளை முன்னின்று நடத்தி வருகிறார்கள். புத்தாண்டு, பொங்கல், பெருநாள் ஆகிய தினங்களில் நிகழ்வுகளையும் முன்னின்று நடத்தி வருகிறார்கள். நேற்று 2021 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ° Tamul" என்ற அமைப்பு நடத்திய அறிவு சார் கருத்தரங்கில் தமிழகத்தை சேர்ந்த பல தலைவர்கள், அறிஞர்கள் காணொளி வழியே பங்கேற்றனர். அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உலக அமைதி, சமாதானம் ஆகியவற்றை முன்னிறுத்தி மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார். உலக தமிழ் முஸ்லிம் மீடியா அமைப்பு நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்வுகளில் உலகம் எங்கும் வாழும் தமிழக மக்கள் பங்கேற்று நிகழ்வுகளை கண்டு களித்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 01.01.2021
Month:
மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் வெற்றி! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாருன் ரசீது நிறைவு செய்து வைத்தார்!
ஈரோடு:ஜன.02., மஜக வின் சார்பில் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் கடந்த அக் 17.10.2020 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டார வடையில் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகமெங்கும் பெரும் எழுச்சியோடு நடைபெற்ற இம்முகாம்கள் மூலம் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இதன் நிறைவு நிகழ்வு 01.01.2021 இன்று ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் நகர செயலாளர் மைதீன் பேக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இதில் பங்கேற்று உறுப்பினர் படிவங்களை பெற்று முகாமை மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது,Mcom. அவர்கள் நிறைவு செய்து வைத்தார், அவருடன் துணை பொதுச் செயலாளர் சையது அஹமது பாருக், உடனிருந்தார். பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநில பொருளாளர் அவர்கள் கூறியதாவது, மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருவதை தமிழக மக்கள் அறிவார்கள், தமிழகத்தில் நிகழக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்னுடைய கருத்தை கூறி மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக மஜக விளங்கி வருகிறது, இந்நிலையில் கட்சியை பலப்படுத்தும் விதமாக 1லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கத்தோடு கடந்த 75 நாட்களாக தமிழகம் முழுவதும் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை
நாச்சிகுளத்தில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்! மாநில செயலாளர் தாஜூதீன் பங்கேற்பு!!
ஜன.02, மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் இறுதிகட்ட முகாம் நேற்று நாச்சிகுளத்தில் ஜூம்ஆ பள்ளிவளாகம் மற்றும் நாச்சிகுளம் கடைவீதி இரயில்வே கேட் அருகிலும் கிளை செயலாளர் ரியாஸ் அகமது தலைமையில் நடைப்பெற்றது. இரண்டு இடங்களில் நடைப்பெற்ற முகாமை மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்று துவக்கி வைத்தார். இரவு 8 மணி வரை தொடர்ந்த இம்முகாமில் இளைஞர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்பட நூற்றுகணக்கானோர் பதிவேட்டை பூர்த்தி செய்து தங்களை மஜகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மஜக நிர்வாகிகள் இம்தியாஸ், இஜாஸ், இம்ரான், ஹாரீஸ், ஹஜ்ஜி தம்பி, ரியாஸ்தீன், ஜியாவுதீன், நிஸான் ஜான்முகமது, KPN கபீர் உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 01.01.2021
கரூரில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.02., மனிதநேய ஜனநாயக கட்சி கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் தொழிற்சங்க மாவட்ட தலைவர் உவைஸ் அகமது, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்று தங்கங்களை மஜக வில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்வில் கடவூர் ஒன்றியச் செயலாளர் உமர் அலி, கடவூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் அசாரூதீன், மெளலவி இஸ்மாயில் அன்வாரி, R. அக்கீம், டாக்டர் K.சதாம், ஹுசைன், ரபீதீன், ரஹ்மான், ஷரீஃப், பிச்சை முகம்மது, பகுரூதீன், அசன் முகமது, முகமது சுல்தான், முகம்மது இப்ராஹிம், சித்திக் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கரூர்_மாவட்டம் 01.01.2021
மணமேல்குடி ஒன்றியத்தில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் மஜக வின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது. இம்முகாமை மாவட்ட துணை செயலாளர் சாஜிதீன் துவக்கி வைத்திட திரளானோர் தங்களை மஜக உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு முதற்கட்டமாக மஜக அட்டைகளை மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி கையளித்தார். இதில் MJTS மாவட்ட துணை தலைவர் அஜ்மீர் கான், மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப் ஆகியோர் முன்னிலை வகிக்க, மீனவரணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், கோட்டைப்பட்டினம் கிளை செயலாளர் பரக்கத் அலி, பொருளாளர் ஜூபைர் கான், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலாளர் தாஜ்தீன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது, சதாம் உசேன் @ மன்னார் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.